உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 169 திடீரென்று நடைபெற்றுவிடுகிற இத்தகைய கொடுமை கூறுவது களுக்குப் பொறுப்பேற்க வேண்டுமென்று பொருத்தமாகாது என்றும், அப்படிக் கூறினால் அது அரசியல் நோக்கம் கொண்டதாகி விடுமென்றும் நான் அன்றையக் கடிதத்திலேயே குறிப்பிட்டிருப்பது உனக்கு நினைவிருக்கும்! அத்துடன் மதுவிலக்கு வெற்றிபெற ஒரத்தநாடு திட்டத்தை விரிவாக்கிட வேண்டுமென்று நான் குறிப் பிட்டுள்ளதையும் தொடர்புடையவர்கள் சிந்திக்க வேண்டுமென்றும் செயல்படுத்த வேண்டுமென்றும் சுட்டிக் காட்ட விழைகிறேன். உடன்பிறப்பே, இதற்கிடையே சீட்டுக் கம்பெனி சோதனையென்றாலும்- சிவன் சிவன் கோயில் திருட்டு என்றாலும் வார்னீஷ் சாவு என்றாலும் - வறட்சி யால் துயரம் என்றாலும் நமது கழகத்துடன் முடிச்சுப் போட்டுப் பார்ப்பதில் மன ஆறுதல் கொள்கிறவர்கள் 6 6 99 “ ஏனோதானோ என்று எதையாவது எழுதிக் புன்னகையை கொண்டும் பேசிக்கொண்டுமிருப்பார்கள் அவர்களைப் பார்த்து அலட்சியப் ஒரு உதிர்த்து விட்டு அமைதி வழி சென்று கழகம் கட்டிக் காத்திட ஆக்கப்பணிகளை ஆற்றிடுமாறு உன்னைக் கேட்டுக் கொள் கிறேன். 66 வதந்திகளைப் பரப்பாதே ! வதந்திகளை நம்பாதே!' என்ற வாசகம் நாடு முழுதும் காணப்படுகிறது! பரப்பப்படும் வதந்திகளைவிட, அவைகளை நம்பாமல் இருப்பதே "நாடு நல்வாழ்வை நோக்கி நடைபோடு கிறது" என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைய முடியும். அன்புள்ள, மு. க. 8-7-76