உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV என் கடிதங்கள் காலை ஏழு மணிக்குப் பிறப்பெடுக்கும்; ஒவ்வொரு நாளும் ! இதுவரையில் இந்த அறுபத்து மூன்று வயதில் அடுத்த ஆண்டு வந்தால் ஐம்பதாண்டு காலப் பொது வாழ்க்கை எனக்கு! அந்த வாழ்க்கையின் விரிவான விபரங்களை, நெஞ்சுக்கு நீதி முதல் பாகத்திலும்; இரண்டாம் பாகத்திலும் நினை வுக்கு வந்தவரை எழுதியிருக்கிறேன். மூன்றாம் பாகத்தை எழுதிட ஆரம்பிக்கவில்லை. காலம் இடம் தருமோ; தராதோ? எனக்குத் தெரியாது. - ஐம்பதாண்டு காலப் பொது வாழ்வில் இதுவரை; பாசறை - போர்க்களம் பதவிப்பொறுப்பு பணியாற் றும் வாய்ப்பு - இப்படி மாறி மாறி வரினும் சந்தித்த; இன்னமும் சந்தித்துக் கொண்டிருக்கிற சோதனைகள் எண்ணிலடங்கா! குமுறல் - கொந்தளிப்பு - கவலை கலக்கம் - ஏமாற் றம் - துரோகம் - இப்படி எத்தனையோ ஈட்டிகள் என் இதயத்தில் பாய்ந்து ரணமாக்கியுள்ளன ! அந்த ரணம் ஆற்றிடும் மருந்தாகத்தான் - எனது எழுத்துக்கள் எனக்குப் பயன்பட்டிருக்கின்றன ! பயன்படு கின்றன ! இந்தக் கடிதத் தொகுப்பில் பல செய்திகள், நிகழ்ச்சி கள், மதிப்பு மிக்கத் தலைவர்கள், அன்புக்குரிய நண்பர்கள் விமர்சிக்கப்பட்டிருக்கலாம். அது; அந்தக் கால கட்டத்து அரசியல் தட்பவெட்பத் தைக் காட்டுவதாகவே எடுத்துக் கொள்ள வேண்டுமென பணிவன்புடன் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/6&oldid=1695414" இலிருந்து மீள்விக்கப்பட்டது