உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை காலம் ஒன்று பிறந்தது. கருத்தொன்று மலர்ந்தது, 'தமிழைத் தாழ்த்திப் பிறமொழிகளை உயர்த்தாதே!' - என்னும் சொல்மாரி தமிழ் பூமியை, தரணி வாழ் தமிழர்களின் நெஞ்சங்களை நனைத்தது. எதிர்ப்புகள், ஏளனங்கள் முதலில் முகங்காட்டி னாலும், அவை மெல்லச் சுருங்கி, வாடி வதங்கி உருத் தெரியாமல் மறைந்தன. 'தமிழை உயர்த்தி தமிழரை உயர்த்து' என்ற எழுச்சிக் குரல் ஒலிக்க தமிழகத்தை வலம் வந்த இளைஞர்களில் பத்தோடு பதினொன்றாக இல்லாமல் முத்திலே முதிர்ந்த தாக, முனைமழுங்கா வேலாக உருப்பெற்றவர்தான் நமது கலைஞர். இது நான் கூறுவதல்ல; நாளைய தமிழகம் அவரைப் பற்றி தீட்டப்போகிற வைரவரிகளாகும். - - ஆம், தமிழக மறுமலர்ச்சிக்கு வித்திட்ட திராவிட தளபதியாக இயக்கத்தில் தொண்டனாக இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக உயர்ந்து, தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றிருப்பவர்தான் அருமைத் தலைவர் கலைஞர் அவர்கள் ! பேரறிஞர் அண்ணாவின் காலத்திலும் அவருக்குப் பிறகும் தமது எழுத்து, பேச்சுவன்மையால் தமிழகத்தில் மட்டுமல்லாமல், தமிழ் பேசும் உலக நெஞ்சங்கள் அனைத் திலும் தன்னிகரற்று விளங்குபவரும் தானைத் தலைவர் கலைஞர் அவர்கள்தான். - பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழக இளைஞர்களை தம் தம்பியாகப் பாவித்து, தமது எண்ண வித்துக்களை அவர்கள் நெஞ்சத்தில் ஊன்றியதுபோல், கலைஞர் அவர்கள், அண்ணாவின் தம்பியாக தம்பியாக நின்று நின்று தமிழக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/8&oldid=1695417" இலிருந்து மீள்விக்கப்பட்டது