உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 கலைஞர் அந்தப் பனைமரத்தை உங்கள் தேவைக்காக வெட்டினீர்கள்! ஏதோ தீமையிலும் ஒரு நன்மை என்பதுபோல, அந்த மரம் பாலமாக இருந்து ஊராருக்குப் பயன்படுகிறது! அதை யும் போய் இரண்டாகப் பிளந்து உங்கள் வீட் டுக்கு ஏணி செய்கிறேன் என்கிறீர்களே; இது நியாயமா? போங்களய்யா போங்கள்!” 6 என்று ஊரார் உறுமியதுதான் தாமதம், அந்தச் சிலர் அங்கிருந்து நழுவிவிட்டனர். "இப்போது பலருக்குப் பய னளிக்கும் பாலமாக, ஊரார் பாதம் படுவதையே பெரும் பாக்கியமாகக் கருதிக்கொண்டு நான் என் பணியைச் செய்து வருகிறேன். இதுதான் என் கதை. - உடன்பிறப்பே, பனைமரம் - தன் கதையைச் சொல்லி முடித்துவிட்டது! பனைமரப் பாலத்தை இரண்டாகப் பிளக்க விரும்பாத அந்த ஊராரை நாம் வாழ்த்து வோமாக! அன்புள்ள மு.க. 10-7-76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/20&oldid=1695428" இலிருந்து மீள்விக்கப்பட்டது