உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கலைஞர் கம் பெற்றுள்ள வலிவை, அந்தப் பணியாற்றியோ ரில் ஒரு சிலர் விலகிச் சென்று தான் ஆற்றிய பணியின் பலனைக் கழகத்திலிருந்து கழகத்திலிருந்து எடுத்துக்கொள்கிறேன் என் றால் அதனால் அந்த வலிவு குறையும் என்பது நடக்காத காரியம். அதுபோலவே, கழகத்தின் வலிவை, அழித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன் என்பதும் வீண் கனவு! 6 6 சேர்ந்து த 'ஒரு இயக்கத்திலிருந்து சிலர் தம்மைத் துண்டித் துக்கொள்கிறார்கள் என்றால் அவர்களோடு, அவர்களும் ஏற்படுத்திவைத்த எழுச்சி போய்விடாது. அவர்களைக் கேலி செய்தபடி, அவர்கள் ஆக்கித் தந்த எழுச்சி, அவர்கள் விட்டுச் சென்ற இடத்திலேதான் இருக்கும்" என்று அண்ணா அவர்கள் கூறிய பொன்மொழி இன்றைக்கும் நமது காதுகளில் ஒலித்துக்கொண்டுதா னிருக்கிறது. உடன்பிறப்பே, அடைக்கலம் புகுந்த இடத்தின் நம் பிக்கையைப் பெறவேண்டும் என்பதற்காகவும், குறைந்த பட்சம் கூட்டங்கள் பேசும் வாய்ப்பாவது கிடைத் துக்கொண்டிருக்கவேண்டுமென்பதற்காகவும், எவ்வளவு அலட்சியப்படுத்தப்பட்டாலும் உள்ளே வெளியே மிடுக்கு குறையாதவர்களைப் போலக் காட்டிக்கொள்ளச் சிலபேர் படாத பாடு படுகிறார்கள் நம்மை விட்டுச் சென்ற பிறகு! 6 6 'அண்ணே! இன்று பத்திரிகை பார்த்தீங் களா?" "என்னப்பா விசேஷம்?" 6 “கருணாநிதியைக் கலக்கு கலக்கு என்று கலக்கி எடுத்து விட்டாரே! யார்?'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/80&oldid=1695488" இலிருந்து மீள்விக்கப்பட்டது