உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 77 குறுந்தொகைக்கு உரையெழுதியவர்களில் ஒருவரான பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்கள் தீட்டியுள்ள அணிந்துரையில் பின்வருமாறு குறிப்பிடுகி றார். "வடமொழி முதலிய பிறமொழி வாணர்கள் தங்கள் இலக்கியங்களை ஆக்குவதற்குப் பெரும் பாலும் அறிவோடு பொருந்தாத கற்பனைகளையே பயில வழங்குவராயினர். . பாற்கடலும், கருப்பஞ்சாற்றுக் கடலும், மேலுலகங்களும், கீழுலகங்களும், அரக்கர்களும், தேவர்களும் பிசாசர்ளும, இன்னோரன்ன பொருந்தாப் புனைவுகளை அவர்கள் இலக்கியங் களில் யாண்டுங் காணலாம். பல்லாயிரம் ஆண்டு உயிர் வாழ்ந்திருப் போரையும், பதினாயிரம் மகளிரை மணந்தோர் களையும் அவர்கள் இலக்கியங்களிலே காண் கின்றோம். இப்புனைவுகள் ஆராய்ச்சி அறிவிற்குச் சிறிதும் பொருந்தாத பொய்ப் புனைவு களேயாகும். அன்றோ? 68 . நந்தமிழ் நாட்டுப் பிற்றைநாட் புலவர் களும் இனத்ததாகும் அறிவு" என்றபடி அக் கூட்டுறவானே நல்லறிவிழந்து அவர் நெறியே பற்றிப் பிற்றை நாள் வீண்படும் இலக்கியங்கள் பலவற்றை யாத்து அவம் போயினர். நம் சங்க காலத்து இலக்கியங்களிலே, இத்தகைய பொருந்தா புனைவுகளை யாண்டும். காண்டல் அரிது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/91&oldid=1695499" இலிருந்து மீள்விக்கப்பட்டது