உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 எதையும் தாங்கும் இதயம் என்றும் நமக்குத் துணை! உடன்பிறப்பே, கொண்டோர் “தனக்கென்று ஒரு இலட்சியம் எவரும் அதற்கான பணியாற்றுகையில், குறுக்குப் பாதைகள் கண்டால் அதிலே நுழைந்து, இலட்சியத்தை இழந்துவிடச் சம்மதிக்கமாட்டார்கள். இலட்சியத்தை நோக்கி செல்வோருக்கு அதற்கான ஆக்கமும் ஊக்கமும் அளிப்போரே தலைவர்கள், நண்பர்கள், வழிகாட்டிகள், ஞானாசிரியர்கள். இடையில் இளநீர் கொடுப்போர் நன்றிக் குரியோர். இதயம் நோகப் பேசுவோர் பரிதாபத்துக்குரியோர். உடனிருந்து கெடுப்போர் கண்டனத்துக்குரியோர். பாதை யில், பயணத்தின் கடுமை தாங்கமாட்டாமல் பட்டுப் போவோர் அனுதாபத்துக்குரியோர்" தம்பிக்கு அண்ணா எழுதிய கடிதமொன்றில் காணப் படும் வைர வரிகள் தான் மேலே காணப்படுபவை. திரும்பத் திரும்பப் படித்துப்பார். எவ்வளவு தொலை நோக்குடன் அண்ணா அவர்கள் இந்த வாசகங்களை வடித் தெடுத்திருக்கிறார் என்பது புரியும். குறுக்குப்பாதை கண்டு அதிலே நுழைந்து இலட்சி யத்தை இழந்துவிடச் சம்மதித்தால் மலைபோல வந்த துயரங்கள் பனிபோல விலகும் என்று தெரிந்தாலுங்கூட