உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்ச்சிக் கடலாகிறது, மனம்! உடன்பிறப்பே, நமது பேராசிரியருக்கு இந்த ஆண்டு டிசம்பர் திங்கள் 19 ஆம் நாள் 55-வது பிறந்தநாள் விழா. ஏறத்தாழ முப்பத்தி நான்கு ஆண்டுக் காலத் தொடர்பு எனக்கும் அவருக்கும் உண்டு. 1942 ஆம் ஆண்டு 'முரசொலி' இதழின் ஆண்டு விழாவுக்கு நாவலர், பேராசிரியர் இருவரையும் திருவாரூருக்கு அழைத்திருந்தேன். அன்று எங்களிடையே ஏற்பட்ட தொடர்பும் நெருங்கிய நட்பும் காலத்தாலோ அல்லது இடையிலே சிலர் செய்த கலகத் தாலோ ஒரு சிறிதும் ஊனமுறவில்லை என்பதை; உடன் பிறப்பே! நீ மிக நன்றாக அறிவாய். மனதிற்பட்டதை ஒளிக்காமல் துணிந்து சொல்லக் கூடிய தம்பி அன்பழகன்" என்று அண்ணா பல நேரங்களில் எடுத்துக் கூறியிருக்கிறார். பொதுத் தொண்டிலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வாழ்க்கையிலே மிகவும் அருமைத் தந்தையார், நொந்துபோன அவரது “தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல்' எனும் குறள் மொழிக்கேற்ப மொழிக்கேற்ப அவரது வங்களை மெத்த இன்னல்களுக்கிடையே வளர்த்தார். அந்தச் செல்வங்களில் - அவரது அன்புச் செல் தமிழ்ச் செல்வமாய், தியாகச் செல்வமாய், அறிவுச் செல்வமாய், அன்புச் செல்வமாய்?