உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 10.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் தமிழ் போகட்டும் - இந்தி வரட்டும் - 113 என்று எங்கி சிறு - ருந்து எந்த நேரத்தில்; முழக்கம்கூட அல்ல முணுமுணுப்புக் கேட்டாலும் செந்தமிழுக்கொரு தீமை வந்தபின்னும் இந்தத் தேகம் இருந்தொரு லாப முண்டோ?" எனக் கேட்டுச் சீறியெழும் சிங்கத் தமிழர் பாசறைதான் தி. மு. கழகம் என்பதை, சுப்பிரமணிய னாருக்கு ஞாபகம் செய்கிறேன். "மங்கையொருத்தி தரும் சுகம்; எங்கள் மாத் தமிழுக்கு ஈடில்லை” எனக்கூறி; “எப்பக்கம் வந்து புகுந்துவிடும்-இந்தி எத்தனை பட்டாளம் கூட்டிவரும்? உயிர் தரவும் ஒப்பி 1 எனக் கேட்டு, ஓராயிரம் ஈராயிரம் இலட்ச மெனத் தமிழ் காக்கத் துடிக்கும் புலிநிகர் இளைஞர் களின் முகாம்தான் தி. மு. கழகம்! தேர்தலுக்காக இந்தி எதிர்ப்பாளராக மாறி, எதிர் காலத்திலே இந்திக்கு ஆலவட்டம் சுழற்ற நினைக்கும் சந் தர்ப்பவாதிகளைத் தமிழகம் உணர்ந்துதான் வைத்திருக் கிறது. உடன்பிறப்பே, அண்ணா முதல்வராகப் பொறுப் பேற்றவுடன் பள்ளிகளில் இந்தியை அகற்றி மும்மொழித் திட்டத்தை மூலைக்கு அனுப்பிவிட்டு, இருமொழித் திட்டத்துக்கு வழிவகுத்தார். அப்படிச் செய்தது நமக்கு இந்தி மொழியின் மீதுள்ள வெறுப்பினால் அல்ல; அதன் மீதோ, வேறு எந்த மொழி மீதோ, பகையுமில்லை. ஒரு மொழி மற்றொரு மொழியினர் மீது கட்டாயமாகத் திணிக்கப்பட லாகாது என்பதே நமது கொள்கை. 8-10-8