உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 என்று தந்தி கொடுத்து-அவர்கள் எல்லாம் சென்னைக்கு வந்ததும், 'நான் உங்களைப் பொதுக்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்தேன்; நீங்கள் என்னைத் தலைவனாகத் தேர்ந் தெடுங்கள்' என்பதுதான் அவர்களது சனநாயக முறையாக இருக்கிறது! தி.மு. கழகத்திற்கு அத்தகைய சனநாயக முறை இருந் தால், இன்றைக்கு இந்திரா காந்தி அம்மையாரின் போக்கை நிபந்தனையில்லாமல் நிறைவேற்றுகின்ற 'கால் வருடி'களா கத்தான் தி. மு. கழகம் இருந்திருக்க முடியும்! மரபுகளுக்கு இலக்கணம் வகுத்து தந்த அண்ணா வழி வந்தவர்கள் நாம்! தி மு. கழகத்திற்கு சனநாயக மரபுகளை அண்ண அவர்கள் எப்படிக் கற்றுக் கொடுத்தார் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்லலாம். அண்ணா அவர்கள் பொதுச் செயலாளராக இருந்த நேரத்தில், ஒரு பொதுக்குழுவின் ஒரே ஓர் உறுப்பினர், அண்ணா அவர்கள்மீது ஒரு சாதாரண குறையைச் சொன் னதும், அந்தப் பொதுக் குழுவுக்குத் தலைமை ஏற்றிருந்த அண்ணா அவர்கள் கீழே இறங்கி வந்து-கீழ் வரிசையில் அமர்ந்திருந்த நண்பர் ஏ.வி.பி. ஆசைத்தம்பியை அழைத்து, 'என்னைப் பற்றிய குற்றச்சாட்டு வந்திருக்கிறது; ஆகவே, நான் தலைவராக வீற்றிருந்து விசாரிக்கக்கூடாது; விசாரணை முடிகின்ற வரையில் நீ தலைவனாக உட்கார்ந்து- என்னைக் கேள்விகளைக் கேட்டு விசாரணை செய்; நான் குற்றச் சாட்டுக்குப் பதில் சொல்கிறேன்' என்று சொன்னார்கள்; இப்படிப்பட்ட சனநாயக முறையைக் கற்றுக் கொடுத்த தலைவன் வழியில் வந்தவர்கள் தி. மு. கழகத்தினர்! இப்படிப் சிறிய பிரச்சினைகளில்கூட, 'சனநாயக மரபு தவறக்கூடாது' என்று கட்டிக் காத்தது கழகம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/10&oldid=1695787" இலிருந்து மீள்விக்கப்பட்டது