உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சூளுரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 68 1 பேர்வழிகளை பாதுக்கல்காரர்களை வன்முறை யாளர்களை மதவாதிகளை-வகுப்பு வெறியர்களை மண்டையோட்டுச் சாமியார்களை விடுதலை செய்ய. வேண்டுமென்று சொல்லவில்லை. பழம் பெரும் தேசத் தலைவர்களை - அவர்கள் எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர்; கழகத்திடம் ஒட்டோ உறவோ கொள்ளாதவர்கள்—'அவர்களை விடுவிக்க வேண்டும்' என்ற கோரிக்கை; அதைப் போலவே, 'நெருக்கடி நிலையை மறு பரிசீலனை செய்திட வேண்டும்' என்ற கோரிக்கை, நியாயமான உரிமைகளை பத்திரிகைகளுக்கு வழங்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை; இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கிளர்ச்சி நடத்த வேண்டுமென்று-போராட்டம் நடத்த வேண்டுமென்று நாம் சொல்லவில்லை; வேறு என்ன சொன்னோம்?- இந்தல் கோரிக்கைகள் வெற்றி பெறத் தமிழ்நாடு, தன்னுடைய பண்பாட்டிற்கேற்ப - காந்தீய நெறியில் - அண்ணாவின் வழியில்--சட்டம், ஒழுங்கு, அமைதி ஆகியவைகளுக்கு ஊனம் வராத அளவில் இந்தப் பிரச்னையை அணுகி, இதற்கு ஒரு நல்ல தீர்வைக் காண வேண்டும்' என்பதுதான், சென்னை யில் நடைபெற்ற கழகச் செயற்குழுவின் தீர்மானமாகும். அந்தத் தீர்மானத்தை நான் நிருபர்களிடம் விளக்கிய போது, 'அப்படியானால், நெருக்கடி நிலை அடிப்படையில் மத்திய அரசு அனுப்பும் தாக்கீதுகளை மாநில தி. மு. க. அரசு நிறைவேற்றுமா- நிறைவேற்றாதா?' என்று என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான், 'மத்திய அரசின் தாக்கீதுகளை நிறை வேற்ற வேண்டாமென்று மாநில அரசைச் செயற்குழு கேட்டுக்கொள்ளவில்லை. அப்படிப்பட்ட முடிவு எடுக்கப்படவில்லை' என்றுதான் சொன்னேன். எதுவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூளுரை.pdf/72&oldid=1695849" இலிருந்து மீள்விக்கப்பட்டது