உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தனக்கிண்ணம் 47 அப்படியே நின்று கந்தன் விம்மி விம்மி அழுதுவிட்டா தன்னுடைய வீட்டுக் காரியத்திற்கு ஒருவர் வருவதாயிருந்து வராமல் போனாலும் பரவாயில்லை. பொதுக்காரியம்-பொது மக்களிடம் பணம் வசூல் செய்து பொதுமக்களை எப்படி ஏமாற்று வது என ஏங்கினான். மேடைக்கு வந்து மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். மக்கள் முணுமுணுத்தபடி கலைந்தனர். வீட்டுக்கு வந்தான். கமலாவுக்குக் காய்ச்சல் அதிகமாகிவிட்டது. கண்களிலே ஒளி குறைந்துவிட்டது. தாயார் பக்கத்திலே அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள். கந்தன் ஓடிவந்து “கமலா! கமலா!” என்று அலறினான். . அவள் மெல்ல வாய் திறந்தாள். “அத்தான் அந்தச் சந்தனக் கிண்ணம்” என்று இதழசைத்தாள். “கமலா, அதை நான் தான் திருடி அடகு வைத்திருக்கிறேன்- பணம் வந்ததும் மீட்டுவிடலாம் ' என் று கதறினான். அவன் கதறலிடையே கமலா கமலா கண்ணை கண்ணை மூடினாள். பிறகு திறக்கவே யில்லை ; கந்தன் அழுதான் ; அழுதுகொண்டேயிருந்தான்! இப்போது கந்தன் ஏழையல்லன். விட்டாலும் பண வசதி இருக்கிறது. பணக்காரனாயில்லா இருபது ரூபாய்க்கு அடகு வைத்த சந்தனக் கிண்ணத்தை வட்டியோடு முப்பது ரூபாய் கொடுத்தால் மீட்டு விடலாம். னால், அதை மீட்டு யாரிடம் கொடுப்பது? கமலாவா இருக்கிறாள் அவளிடம் கொடுக்க? அவளைத்தான் இந்திவெறியர்களின் சிறைச் சாலை, கொஞ்சம் கொஞ்சமாக விடுதலைக்குப் பிறகும் விடாமல் கொன்றுவிட்டதே! கந்தன் சந்தனக் கிண்ணத்தை மீட்டுவிடத் தயாரா யிருக்கிறான். எப்போ து ? கிடைத்ததும் மீண்டும் இலட்சியப் போரின் வெற்றி விழாவிலே, வீரர்களுக்குச் சந்தனம் வழங்கும் சந்தர்ப்பம் வருமே; அப்போது! °