உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய் தாய்மை "சரசத்தாலும் சாகசத்தாலும் எப்படியோ அரசியின் மீது அரசனுக்கு இருந்த அன்பை அழித்து விட்டேன். அரசனது இருதயத்திலே அழியாத சித்திரமாக அமர்ந்திருந்தாள் அந்தக் கோப்பெருந்தேவி ! அந்தக் கலையாத ஓவியத்தைக் கரிகொண்டு மெழுகிவிட்டேன். 66 "மன்னரின் மன மாளிகையில் ஜோதி விளக்கு அவள், ஒரு காலத்தில்! அந்த ஜோதி விளக்கு இன்று வீதியிலே வீசப்பட்டு விட்டது. தோழிகள் புடை சூழ-தோகை மயில்கள் ஆடும் நந்தவனத்தில் மலரால் நடைபாதை அமைத்து, அவளும் அரசரும் ஆனந்த பவனிகள் நடத்தினரே-அது அந்தக் காலம். "இப்போது வேந்தரின் இருதயத்தில் இந்த சுழற் கண்ணியின் சுந்தர ரூபம் பூஜை அறைப் படம்போல ஜோடித்து வைக்கப்பட்டிருக்கிறது. வேந்தரின் மடியும், மலைத்தோளும் அவளுக்குச் சொந்தம் ஒரு காலத்தில் ! இன்றோ என் சொல்லுக்குச் சுழலும் ‘மாயப் பதுமை'யாகி விட்டார், மணிமுடி வீரர்! இது எனக்கு வெற்றிதான்-ஆனாலும் என் மனம் அமைதியடைய வில்லை. அரசரின் சத்தையும் நேசத்தையும் இழந்தாள் எனினும் பட்டத்து ராணி என்ற மதிப்பை இழந்தாள் இல்லை. அவளது மகன் தான் கிரீடத்துக்குச் சொந்தக்காரன் என்ற பாத்ய தையைப் பறி கொடுத்தாள் இல்லை.