உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்மை 65 'இந்த நிலையில் எனக்கு நிம்மதி து மைத்துனரே ! ஊரெல்லாம் அவள் பக்கம் அனுதாபம் காட்டுகிறது. அரசரும் அவளும் பிரிந்திருப்பது நாட்டுக்கு ஏற்பட்ட எதிர்பாராத கேடு என்று புலம்புகிறது மக்கள் மன்றம். என்னுடைய குணாதிசயங் களைக் கொற்றவன் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அதனால் என் வலையில் வீழ்ந்து விட்டார் என்று மந்திரிகளின் குழு மாரடித்து அழுது கொண்டிருக்கிறது. இளையராணி நான்- என்கிற மதிப்பைக்கூடத் தர மறுக்கிறது அரண்மனை வட்டாரம். “அரசரின் மஞ்சத்து ராணியாக மட்டுமன்றி, வெஞ்சமரில் வாளெடுத்து வேலெடுத்துப் போர் புரியும் வீராங்கனையுமன்றோ கோப்பெருந்தேவி-அவள் எங்கே? வளையொலியால் மலை நிகர்த்தவரை வளைத்து விட்ட இவளெங்கே?-என்று வீரர்களின் பாசறைகளில் பேசப்படுகிறது. இத்தனை எதிர்ப்புக்களையும் சமாளிப்பதற்கு நான் தயாராகிக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் மைத்துனரே! அவள் மகன் இன்பசாகரன் வளர்ந்து, இளவரசு மகுடத்தைத் தலையில் தூக்குவதற்குள் அழிக்கப்பட்டுவிட வேண்டும். சுந்தரபுரி, சொத்தாக மாற வேண்டும். என் வயிற்றிலே வளர்ந்துகொண்டிருக்கும் சிசு இந்த நாட்டுச் செங்கோலுக்கு உரிமை பாராட்டவேண்டும். அதற்குத் தடை அவளது அருமருந்தன்ன மகன்! தடை இடறப்பட ஒரு வழி கூறும் மைத்துனரே ! உமது உதவியோடுதான் நான் ஜெயக் கொடி நாட்டவேண்டும். "மைத்துனரே! ? சுழற்கண்ணியின் உமது மறைவிலே நின்றுகொண்டுதான் என் ஜீவ லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும். ஏன் மௌன மாக இருக்கிறீர்-பேசும்; விலகி நின்று பேசுகிறேனே என்ற கோபமா ? வேந்தர் வரும் நேரமாயிற்றே என்றுதான் பயந்தேன். இதோ...மூடிக் கிடக்கும் உமது முரட்டு உதடுகளை எனது ரோஜா இதழ்களால் திறக்கிறேன் ... இச் !... இச் '! போதுமா? நீண்ட விருந்து மற்றொரு நாளைக்கு! மைத்துனரே! சுந்தரபுரியின் ராணி சுழற்கண்ணி-அவள் குழந்தைக்கு இந்த நாடு உரியது. இப்படி ஒரு நல்ல எதிர்காலம் தோன்றுமா? அதற்கான திட்டம். உமது தீட்சண்யமிக்க மூளையிலே இப்போதே உதயமாகுமா?" 6 “கவலைப்படாதே சுழற்கண்ணி! இந்த தீட்சண்யன் இருக்கும்போது திட்டங்களுக்கா குறைவு? ? தித்திக்கும் முத்தங்களை நீ தந்ததுபோல், சித்திக்கும் யோசனைகளைத் தரவும் க5