உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனங்குலை 121 பிறகே, அனாதை இல்லம் உன்னை எடுத்து வளர்த்ததாம். ஆகா... என் மகன் எவ்வளவு பெரியவனாகி விட்டான்-தம்பீ ! நீ எப்படி உன் தங்கையைத்:தேடிப் பிடித்து இங்கு வந்தாய்?" 66 கிழவர் பேசிக்கொண்டேயிருந்தார் ; பூரிப்பு தாங்காமல் ! வேலன், " அய்யோ! அப்பா!” என்று கத்தினான். அவ்வளவுதான், எங்கேயோ ஓட ஆரம்பித்தான். ஓடினான் ; ஓடினான்-இருளில் ஓடி மறைந்தான். கமலம் பிரக்ஞையற்றுக் கீழே விழுந்தாள். கமலம்! கமலம்!!” என்று கிழவர் கூப்பிட்டார். அவளைத் தூக்கித் தன் மடியில் வைத்துக் கொண்டார். இறுக அணைத்துக் கொண்டார். அவள் கன்னங்களில் அவள் கன்னங்களில் மாறிமாறி முத்தமிட்டார். இதழ்களை இதழ்களால் பற்றியிழுத்தார். ஏதோ ஓர் உணர்வு கிழவருக்கு! கமலத்தைக் கீழே படுக்க வைத்தார். கால்களைத் தொட்டுப் பார்த்தார். ஜில்லிட்டு விட்டது. கமலம், போய் விட்டாள். கிழவர், விரக்தியுடன் எழுந்தார். அவர் மனம் பேசிற்று. 66 ' சே! நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று! அண்ணன் தங்கையென்று அபாண்டம் சுமத்தி இருவரையும் பிரித்து விட்டால் அவன் ஓடிவிடுவான்-இவளைத் தட்டிக் கொண்டு போகலாம் எனத்திட்டமிட்டேன். வேஷம் பலித்தது; ஆனால் வெள்ளாட்டுக் குட்டி கிட்டவில்லையே !” கிழவர் பெருமூச்சுடன் தாடி மீசைகளைக் களைந்தார். முரட்டு மோதகவிநாயகம் பிள்ளையாக அந்தக் குடிசையை விட்டு வெளி யேறினார். அவர் உரிமை கொண்டாடும் புறம் போக்கு நிலத்தின் வழியே வீடு திரும்பினார். ஒரு மரத்திலிருந்து ஏதோ தொப் பென்று வீழ்ந்தது. பனங்குலையை யாரோ வெட்டுகிறார்கள் என்று, "யாரடா திருட்டுப்பயல்?" என்று கர்ச்சித்தவாறு மரத்தடிக்குப் போனார். மரத்திலிருந்து விழுந்தது; பனங்குலை யல்ல!-வீழ்ந்தவன் வேலன் ! தீக்குச்சியைக் கிழித்து உற்றுப் பார்த்தார். தலை சிதறிவிட்டது, சிதறுவதுபோல ! குடும்பத்தைச் சிதற அடித்த அந்தக்குணாளர் எந்தவிதச்சலனமும் உள்ளத்தில் மோதாமல் சாதாரணமாக வீட்டுக்குப்போய் நிம்மதி யாகத் தூங்க ஆரம்பித்தார். குலை இப்படியும் பல பிறவிகள் உண்டு உலகத்தில் ! -00000