உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 புரட்சிப் படம் மாஸ் கடல் ஒன்று “டைரக்டர் சார் ! பணத்தைப்பற்றிக் கவலையே இல்லை-உங்கள் இஷ்டத்துக்கு செட்டுகள் போட்டுக் கொள்ளலாம்-ஸ்டுடியோ வுக்குள் அமெரிக்காவின் கட்டிடங்கள் வரவேண்டுமா? கோவின் தெருக்களை அமைக்க வேண்டுமா? காட்டவா? ககனத்தையே அழைக்கவா? மழையா? புயலா? பூகம்பமா? எது வேண்டுமானாலும், என்ன செலவானாலும் சரி- படம் பெரிய படமாக இருக்கவேண்டும். பெரிய படம் என்றால் நாற்பதாயிரம் அடியோ அல்லது சினிமா ஸ்கோப் மாதிரியோ அல்ல சார்! ஒரு வருஷத்துக்கு ஒரு ஊரிலே ஓட வேண்டும்! இந்தப் படத்தைப் பற்றிப் பேசாதவர்கள் பிறக்காதவர்களாகத் தானிருக்க வேண்டும் ! வசூல் மட்டுமல்ல லட்சியம் ! அருமையான கதை! அபூர்வமான வசனம்! அற்புதமான டைரக்ஷன் ! அநாயாசமான நடிப்பு! அமோகமாக கூட்டம்! இப்படி ஒரே பரபரப்பு நாட்டிலே ஏற்பட வேண்டும். நான் இந்தப் படத்தைப் பணம் சம்பாதிப்பதற்காக எடுக்கவில்லை. இதில் வரும் லாபம் முழுவதையும் நாலைந்து கல்லூரிகள் கட்டுவதற்குச் செலவிடப் போகிறேன். உங்களுக்குப் பிடித்தமான எழுத்தாள ரையே ஏற்பாடு செய்து விட்டேன். முற்போக்கு எண்ணத்தோடு எழுதுவதில் அவருக்கு நிகர் அவரே தான். அரைக்கோடி ரூபாய் அதற்காக ஒதுக்கிவிட்டேன். நடிக, நடிகையர் தேர்தல், படப் பிடிப்பு, உடனே ஆரம்பமாக வேண்டும்." பட முதலாளி பரமசிவானந்தம் அவர்கள் முற்போக்கு எண்ணங்கொண்டவர். நல்ல கருத்துள்ள படங்களை மக்களைத்