உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 - கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் கண்ணாடி வளையல்கள் கருப்பு ரவிக்கை-வெள்ளைப் புடவை. சில நாட்களில் வெள்ளை ரவிக்கை-கருப்புப் புடவை. கையிலே வைத்து விளையாடும் பொம்மைகளைக்கூட அழகுபடுத்தித்தானே விற்கமுடிகிறது. காமப்பதுமைகள் அலங்காரமாய் இருந்தால் தானே காலட்சேபம் நடத்தமுடியும். குழந்தை ராஜாவுக்காக அவள் ஒரு மண்பொம்மை வாங்கி யிருந்தாள். அது போதித்த பாடம் இது ! அந்தப் பாடத்திற்குப் பிறகு பகட்டுகள் ஒருபடி அதிகமாகவே ஆயின, ராஜா! ராஜா!! ராஜா!!! எப்போதும் அவளது கசங்கிய இதழ்களிலே இந்தச் செல்லமான பெயர்தான் பனித்துளிபோல உருண்டுகொண்டிருந்தது. ராஜா! முள்ளில் ரோஜா ! என்று தனக்குத் தானே கூறிக்கொண்டு அவனுக்கு முத்தமாரி பொழிவாள். அவள் புருஷன் இறந்தபிறகு, உதடுகளின் உணர்ச்சி மயமான துடிப்போடு அவள் யாருக்கும் முத்தம் தந்தது கிடையாது. எல்லாம் வறண்ட முத்தங்கள் தான். ராஜாவின் கன்னங்கள் மட்டுமே, இவளது இதழ்களால் மென்மை யோடும் பாசத்தோடும் அழுத்தப்படும். அந்த உயிரினும் மேலான ராஜா வுக்கு ஒருநாள் ஆபத்து வந்துவிட்டது. வழக்கம்போல் முத்தம்மா ரயில்வே' கேட்' வியாபாரத்திற்கு வரவில்லை. ராஜாவுக்குத் திடீரெனக் காய்ச்சல் கண்டு, உடம்பு அக்கினிக் கட்டை போல் ஆகிவிட்டது. இரவு என்னென்ன மருத்துவங் களோ செய்துபார்த்தாள். காலையிலே குழந்தைக்கு நோய் கடுமையாகி விட்டது. முகமே மாறிவிட்டது. அதன் சின்ன உதடுகளிலே தங்கியிருந்த புன்னகை எங்கேயோ ஓடி மறைந்து விட்டது. முத்தம்மாளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. 6 பக்கத்திலே பழனி ஆண்டவர் கோயில்...... பிரார்த்தனை செய்துகொண்டாள். அதன் பிறகு குழந்தைக்குப் பிரக்ஞையும் போய்விட்டது. திடீரென்று அவளுக்கு ஒரு ஞாபகம். தியாக ராய நகரிலே அவளுக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர் இருக்கிறார். பணம் கேட்காமலே வைத்தியம் செய்வார் என்று அவள் எதிர் பார்த்தாள். அவரை அவளுக்கு எப்படித் தெரியும் என்று இந்தக் கொடுமையான சந்தர்ப்பத்தில் யாரும் கேட்காதீர்கள் ! அவள் ராஜாவைத் தோளிலே தூக்கிக்கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்டாள். ராஜா துவண்டு விழுந்தான். அவ்வளவு தூரம் நடந்து செல்லத் தன்னாலும் முடியாது என்பதை உணர்ந்