உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணடக்கம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 வேணியின் காதலன் வேணி!'-இதயத்தின் அடித்தளத்திலிருந்து பெரு மூச்சின் துணைகொண்டு உதிர்த்தாள் சூர்யா. அவனது கடைக் கண்களின் ஓரத்தில் அரும்பு விட்டிருந்த கண்ணீர் மார்பகத்தில் விழுந்தது. 66 வா வேணி, உன் கண்ணிறைந்த அந்த மன்னவரை காட்டுகிறேன் வா” என்று கத்திக் கொண்டே வேணியின் கையைப் பற்றி இழுத்தாள் சூர்யா, அப்போது ஆண்கள் வார்டிலிருந்து ஒரு தள்ளுவண்டி வந்து கொண்டிருந்தது. 6 “ஏன் மிஸ்டர் தாமோதர், எந்த 'பெட்' பேஷண்ட் இவர்? என்ன ஆச்சு?” என்று வண்டியைத் தள்ளி வந்த வரைப் பார்த்துக் கோட்டாள் சூர்யா. 6 "நீ இரக்கப்பட்டு, இரவும் பகலுமாய் பாதுகாத்து வந்தாயே அந்த ஆசாமிதான் சூர்யா இவர்! பினிஷ்' ஆகிவிட்டான். 6 6 ஆள் ஆ ! கந்தனா? வேணி! நம் நெஞ்சு புகுந்துவன் செத்துவிட்டான் வேணி!" தரையில் சாய்த்தாள் சூர்யா. 6 - “ஐயோ, என் வாழ்வைத் துண்டித்த சண்டாளா, குண்டப்பா! கந்தா! கந்தா! கந்தா! வேணி தள்ளு வண்டியில் விழுந்தாள் - மண்டை உடைந்து ரத்தம் சிமிண்டுத் தரையை சிவப்பாக்கியது. அந்த செங்குருதி யிலே, வேணியின் கருங்கூந்தல் துவைந்து கிடந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணடக்கம்.pdf/31&oldid=1696729" இலிருந்து மீள்விக்கப்பட்டது