உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தப்பிவிட்டார்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வளையல் வாங்கலையோ .. சமுதாயம்!.... நல்ல சமுதாயம் கேடுகெட்ட சமுதாயம்.உள்ளமறியா உதவாக்கரைகள் உலவும் ளுத்த சமுதாயம்." உ அதை அப்படியே மடக்கி வைத்துவிட்டு நாற்காலி யில் சாய்ந்தான். "பத்திரிகாசிரியராம்... பத்திரிகாசிரியர், வாங்கிய கடனை வட்டியும் முதலுமா நாளைக்குக் கீழே வைக்கா விட்டால் தம்பி.. கம்பி எண்ணணும் ஜாக்கிரதை." வைரக்கண்ணுவின் நெஞ்சிலே இந்தக் காரசார மான எச்சரிக்கை இடியென முழங்கிக்கொண்டிருந்தது. பத்திரிகை நடத்துவதற்காக அரியநாயக முதலியாரிடம் வாங்கிய கடன் ஐநூறு ரூபாய் திருப்பித் தரப்படாத தால் ஏற்பட்ட அபாய அறிவிப்பு இது! நீண்ட மௌனத்திற்குப் பிறகு ஒருநீளமானபெரு மூச்சு. அவன் கண்கள் குளமாகிக் கன்னத்தில் இரண்டு நீர்த் துளிகள் தொத்திக் கொண்டிருந்தன. மேசையில் கிடந்த ஒரு கடிதத்தை எடுத்துப் பிரித் தான். அந்தக் கடிதத்தின் மடிப்புகள் கிழிந்திருந்தன. அத்தனை முறை அதைப் படித்திருக்கிறான் போலும். அன்புள்ள அத்தான் விரைவில் சந்திப் 66 போம்...' 91 "விரைவில் சந்திப்போம்" என்றமுடிவு அன்புள்ள அத்தானைவிட அதிக இனிப்பு வாய்ந்தது என்பதை அவன் இதழ்களின் அசைவு சொல்லிற்று. கன்னத் தில் நின்ற நீர்த்துளிகள் காய்ந்துவிட்டன. 'அத்தான்' என்று ஒரு அழைப்பு குயில்கூப்பிட் டதுபோல இருந்தது. வைரக்கண்ணு திடுக்கிட்டு எழுந்தான். அவன் நெஞ்சி படபடவென்று அடித்துக் கொண்டது. லக்ஷ்மீ!...... அத்தான்'!! இந்த இதய ஒலிகள் பீறிட்டெழுந்து பின்னிக் கொண்டன. அமைதி அதிக நேரம் நீடிக்கவில்லை.