உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தாய்மை நாராயணியைப் பற்றிய பழைய நினைவுகள் அய்ய ரைக் குடைந்தன. நாராயணியை நாயுடுவிடம் அற்ப ணிக்காமல், ஜெயிலுக்கே போயிருந்தாலும் பரவாயில் லையே; ஜெயில் என்ன இந்தக் கோயில் மண்டபத்தை விடவா மோசமாக இருக்கப் போகிறது- என்று தனக் குத் தானே வருந்திக் கொண்டிருந்த ஐயருக்கு, எப்படி யும் நாராயணியை ஒரு முறை சந்தித்துவிடவேண்டு மென்ற ஆசை பிறந்தது. அந்த ஆசையை நிறை வேற் றிக் கொள்ள தக்க சமயம் கிடைத்ததாக எண்ணிப் புறப்பட்டார். நாராயணி வீட்டுக் கதவைத் தட்டினார். நாயுடு தான் வந்து விட்டார் என்ற நினை வில் அவளும் கதவைத் திறந்தாள். அய்யர் எதிரே நின்றார். நாராயணி அவ உடனே வெளியேறுமாறு கட்டளையிட்டுத் தன் அறைப் பக்கம் போனாள். அய்யரும் அவளைத் தொடர்ந் தார். "மரியாதையாகப் போய்விடுவது நல்லது !" என எச்சரித்தாள் அவள். அய்யர் கெஞ்சினார். ரை . . “அன்றொரு நாள் கோயிலிலே முதன் முதலில் சந் தித்துச் கொஞ்சினீரே; அந்த நாராயணியல்ல இவள் ! நாயுடு மனைவி- தர்மகர்த்தா நரசிம்மரின் என கர்சித்தாள் அவள். உடமை!” "என்ன இருந்தாலும் நீ என் மனைவியல்லவா?- அய்யரின் பசிக்கு எப்படியும் அவளை இரையாக்கித் தீர வேண்டும். அவளோ, எரிமலையாக இருந்தாள். அய் யரைச் சுட்டெரித்துவிடும் நெருப்புக் குண்டங்களாகக் காட்சியளித்தன அவள் விழிகள்.