உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரும்பு 73 யத்தான் பள்ளிக்கூடம் போச்சு!" என்றாள் வேலைக் காரி... சுவற்றிலே மாட்டப்பட்டிருக்கும் தன் மூத்தமனை வி யின் படத்தை அண்ணாந்து பார்த்தான் கோகுல்! அங்கே படமில்லை! தூக்கி வாரிப்போட்டது அவனுக்கு! "படம் என்ன ஆயிற்று? வேலைக்காரன் சொன்னான், "குழந்தை படத்தைப் பார்த்து அழுவது அதிகமாயிடுச்சுங்க! அதனால் அதை மறைச்சு விட்டேங்க! என்று. 6 கோகுலின் கண்களில் நீர் ததும்பிற்று! "என்ன படம்” என்று கேட்டாள் கோமதி. று "உங்க அக்கா படம்" என்றான் அவன். வேலைக்காரனிடம் கேட்டு அந்தப் படத்தை வாங்கிப் பார்த்தாள் கோமதி. அவள் கண்களும் கலங்கின. "பூவோடும் பொட்டோடும் மஞ் சளோடும் மாங்கல்யத்தோடும் போய்ட்டாங்க எங்க அம்மணி!” என்று அழுதாள் வேலைக்காரி! "நீங்க வந்திருக்கீங்க தாயே! நீங்களும் மகாலட் சுமி மாதிரி இருக்கீங்க... எங்க சின்ன எஜமானை...அய்யா வோட செல்லக் குழந்தையை...எங்க அம்மணியோட வயிற்றில் வந்த வைரத்தை ஒரு குறையும் இல்லாம காப்பாத்துங்க அம்மா !" - என்று கோகுல்கூற வேண்டியதை வேலைக்காரனே கூறிமுடித்தான். கோமதியிடம் விடைபெற்றுக்கொண்டு, கோகுல், பத்திரிகை அலுவலகத்திற்குப் புறப்பட்டான். அன்றைய தினம் ஆசிரியர் கோகுல் எழுதிய கட்டு ரைகள் அத்தனையும் சுவைமிகுந்தவை! தலையங்கம்