உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழக்கூடை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பழக்கூடை எதுவுமே, என்னை நிரபாரதி என்று கூறும் சக்தி படைத்தவை அல்ல! எனது கள்ளக்காதலி மஞ்சுளாவை நான் தான் கொன்றேன். 9 வெறியில் சொல்லவில்லை, என்னை அறியாத நிலையில் கொன்றுவிட்டேன். நான் ஒரு டாக்டர் கோபாலபுரத்திலே குடியிருந்துகொண்டு, டாக்டர் தொழில் நடத்தி வந்தேன். நான் குடியிருந்த வீடு, பெரிய மாடி வீடு--மாடியில்தான் வைத்தியசாலையும் எனது குடும்பமும்-கீழேயுள்ள வீட்டில் தான் மஞ்சுளா தனது தந்தையுடன் வசித்து வந்தாள். என் மனைவி கோகிலாவுக்கும், மஞ்சுளாவுக்கும் மிகுந்த நட்பு! அந்த வீட்டுக்குக் குடிபோன சில நாட்களுக்குள்ளாகவே இருவரும் இணைபிரியா தோழிகளாகி விட்டனர். என் துணைவி கோகிலா, பத்தினிகளின் பரம்பரையிலே வுந்தவள். காலை யிலே படுக்கை விட்டெழும்போது, என் கால்களைத்தொட்டு கும்பிடாமல் அறையைவிட்டு வெளியேறுவதில்லை பகலானா லும், இரவானாலும்-எவ்வளவு ம ணி நேரமானாலும், நான் சாப்பிட்ட பிறகே அவள் சாப்பிடுவாள். என் பெயர் பாபு என்பதற்காக- ‘“பா” என்கிற முதல் எழுத்து வரும் எந்த வார்த்தைகளையும் அவள் உச்சரிக்கவே மாட்டாள். என்மீது அளவு கடந்த அன்பும், மரியாதையும், பக்தியும் கொண்டவள் கொஞ்சம் கர்நாடகமாயிருந்தாலும், கணவனைத் தெய்வமாக கொண்ட மனைவியாயிருக்கிறாளே; என்ற எண்ணம், அவள் மீது எனக்கு அளவில்லாத பாசத்தை உண்டாக்கியிருந்தது. திருமணமானவள். கீழ் வீட்டிலேயிருந்த மஞ்சுளா, அவள் கணவன் டில்லியிலே இருந்தான். கணவனுக்கும் மஞ்சுளாவுக்கும் ஏதோ சிறு தகராறு ஏற்பட்டு அது பெரிதாக முற்றி, கோபித்துக்கொண்டு, மஞ்சுளா தகப்பன் வீட்டுக்கு வந்திருந்தாள். மஞ்சுளா நல்ல அழகி. நாகரீக நாரீமணி அவளறு நீலக்குறு நயனங்கள் அனைவரையும் வசீகரிக்கும் தன்மை வாய்ந்தவை, நான் அடிக்கடி வெளியிலே சென்று விட்டு வீட்டுக்கு வரும்போது கீழ் வீட்டைக் கடந்துதான் மாடிக்குப் போகவேண்டும். அத்தகைய சந்தர்ப்பங்கள்- நானும் மஞ்சுளாவும் அடிக்கடி சந்திக்கும் நிலையை ஏற் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழக்கூடை.pdf/37&oldid=1696956" இலிருந்து மீள்விக்கப்பட்டது