உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழக்கூடை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திடுக்கிடும் கதை 53 என்ற தலைப்பில் ஒரு விசித்திரக் கதை சொல்லப்போகிறேன்; மிக சுருக்கமாக! கேளுங்கள் இருவரும் ! அடிமை வியாபாரத்தை எதிர்த்துப் பெரியதொரு கிளர்ச்சி ஏற்பட்டதல்லவா! அது போல ஒரு கிளர்ச்சி-வேறு ஒரு உரிமையைக் காப்பாற்றுவதற்காக நடைபெற்றது. அந்தக் கிளர்ச்சி எந்த ஊரில் நடந்தது என்றெல்லாம் கேட்கா தீர்கள். கிளர்ச்சிக்குத் தலைமை வகித்தவர் பெயரும் தெரியாது. கிளர்ச்சியின் நோக்கம் என்னவென்றால்; அந்த ஊரில் உள்ள ஒரு ஜாதிக் கூட்டத்தாரை ஊரைவிட்டே விரட்டவேண்டும் என்பதுதான்! அந்த ஜாதிக் கூட்டத்தாரின் தலைவன் தான் அந்த ஊரையே பரிபாலித்துவந்தான். தலைவனின் ஜாதியை விரட்டவேண்டுமென்று கிளர்ச்சித் தலைவர் ஆக்ரோஷமாகப் பேசிவந்தார். அப்படி அந்த ஜாதியார் ஓடாவிட்டால் 6 6 - - அவர்களைக் கண்ட இடத்தில் கொன்றுபோட வேண்டுமென்று கர்ச்சனை செய்தார். அந்த ஜாதித் தலைவன் மிகவும் தந்திரசாலி. அவன் தன்னுடைய சூழ்ச்சியைப் பயன்படுத்தி, கிளர்ச்சிக் காரர்களின் ஜாதியிலே பிறந்த ஒருவரைப் பிடித்து, அந்த ருக்குத் தலைவனாக்கிவிட்டான். அந்தப் புதுத்தலைவன் கிளர்ச்சிக்காரத் தலைவரைக் கூப்பிட்டு, 'நீர் இனிமேல் இந்த ஊரைவிட்டு யாரையும் துரத்துவதாகவோ - அல்லது அவர்களை பயமுறுத்தும் வகையிலோ பேசக்கூடாது. அப்படிப் பேசினால் உம்மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறிவிட்டான். புதுத்தலைவனின் மிரட்டலைக் கண்ட கிளர்ச்சித் தலைவர், உடனே. "புதுத்தலைவனுக்கு ஜே' என்று கூறி விட்டு. ஜாதித் தலைவனையும், அவன் கூட்டத்தாரையும் ஊரைவிட்டு துரத்துவதைப்பற்றி இனிமேல் பேசுவதில்லை என்று வாக்கு அளித்துவிட்டு, கிளர்ச்சிப் படையில் உள்ள வீரர்களின் கவனத்தையும் வேறுபக்கம் இழுக்க ஆரம்பித்து விட்டார். இதுதானப்பா என்னுடைய வீரக்கதை” என்று முடித்துவிட்டான் ஆண்டனி. 99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழக்கூடை.pdf/54&oldid=1696973" இலிருந்து மீள்விக்கப்பட்டது