உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழக்கூடை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பழக்கூடை எரிச்சலை அடக்க விழுந்து புரளுகிறதே நாய்; அதைப் போலவே வெறிபிடித்த நாய்கள், மனித உருவிலே என்னை நெருங்கி நாசப்படுத்தி விட்டார்கள். என் கண்ணே! நீயும் என்னைப்போல் ஆகிவிடாதேயம்மா! நமது குடும்பம் பிச்சைக் காரக் குடும்பந்தான்; ஆனாலும் உனது பாட்டி, மிக கௌரவ மாக வாழ்க்கை நடத்தினாள். என்னையும் பிச்சைக்காரி யாக்கா மல், வாழும் சமுதாயத்திலே ஒரு அங்கத்தினராக ஆக்கிவிடப் பெருமுயற்சி செய்தாள். என்னைப் படிக்க வைத்தாள். ஒரு பெரிய மனிதரின் தயவை நாடி படித்தேன். ஆனால் கண்ணே, என் தாய் கண்ணை மூடியதும், என் கண்களும் மூடப்பட்டு விட்டன. பிச்சைக்காரி மகள்தானே என்று, பள்ளிக்கூடத்து மாணவர்கள் என்னை வட்டமிட்டார்கள். எவ்வளவு அழகாக நானிருந்தால், இவர்கள் என்னை வட்டமிட வேண்டும் என்று, நான் கர்வமடைந்தேன். மாணவர்களிடம் பெரியதொரு யுத்தமே ஏற்படவேண்டும் என் பொருட்டு, என்று எதிர்பார்த் தேன். தேன்கூட்டை நாடும் கரடிகள்போல அந்தக் காளைகள் கூடினார்கள். மெய்மறந்தேன். உணர்விழந்தேன். . பெண்களுக்கு படிப்பு கூடாது என்று கூறும் பித்தர் மொழிக்கு இந்தப் பழிகாரியும் ஒரு எடுத்துக்காட்டாக ஆனேன், படித்துறையிலே ஒரு முறை வழுக்கினால், அடுத்த படியிலே காலை அழுத்தமாக ஊன்றி தப்பிவிடலாமென்று நினைக்கக் கூட நேரமிருக்காதே! அதற்குள் குளத்தின் அடித் தளத்திற்கல்லவா போய்ச் சேரவேண்டும். அதுவும் என்னைப் போல நீந்தத் தெரியாதவர்கள் கதி? சமுதாயத்தின் பாசி படிந்த பாழுங்குளத்திலே சருக்கி விழுந்தேன். நாயைக் குளிப்பாட்டி நடுக்கூடத்தில் சேர்க்கலாமா! என்று வசைமாறி பொழிந்தபடி, பெரிய மனிதர், என்னை வீட்டைவிட்டுத் துரத்தினார். தாயாரின் வேலையை மேற்கொண்டேன். பிச்சை எடுத்தேன் என் வயிற்றுக்கு! பிச்சையும் கொடுத்தேன் வாலிபர்களின் வெறிச் செயலுக்கு! இப்படி நகர்ந்த என் வாழ்விலேதான் நட்சத்திரமே! நீ உதயமானாய்! நீயும் என்னைப்போல ஆகிவிடாமல் உன் பாட்டியைப் போல கௌரவமாக, மானத்தோடு வாழம்மா? - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழக்கூடை.pdf/59&oldid=1696978" இலிருந்து மீள்விக்கப்பட்டது