உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளும் ஒளியும் (மு. கருணாநிதி).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

41 கொண்டிருந்தும் கூட, ஆசிரியர்களுடைய உண்மையான பிரதிநிதிகளோ முதலமைச்சரும், கல்வியமைச்சரும் பேச வேண்டுமென்று சொன்னது கிளர்ச்சி செய்கின்ற திரு கே. ராஜாராம் நாயுடு: தவறான அர்த்தத்திற்குப் போய் விடக்கூடாது முதல்வர் அவர்கள். அவர்களுடைய பிரதிநிதி என்று ஒப்புக் கொள்கிறவர்களை அவர்கள் அனுப்ப வேண்டு மென்று சொன்னேன். மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : அவர்கள் சொன் னது, ஒரு வேளை நாங்கள் -நானும், கல்வியமைச்சரும்- உண்மையான பிரதிநிதிகளோடு பேசவில்லையோ என்கின்ற ஒரு தவறான பொருளைக் கொடுத்து விடக்கூடாது என்பதற் காகத் தான் குறிப்பிடுகின்றேன். 5-ந் தேதியன்று என்னை யும், கல்வியமைச்சரையும் சந்தித்தவர்கள் பட்டதாரி ஆசிரி யர்களுடைய சங்கத்தின் தலைவரும், பொதுச் செயலாளரும், அவர்களோடு கூடிய ஒரு சில நிர்வாகிகளும்தான் சந்தித் திருக்கிறார்கள். இதைவிட உண்மையான பிரதிநிதிகள் பட்ட தாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக யார் இருக்கிறார்கள் என் று எனக்குத் தெரியவில்லை. இப்போது ஏற்பட்டிருக் கின்ற வேடி க் கை;கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் கிளர்ச்சிகள் நடைபெறுவது என்பது ஒரு முறை. ஆனால் ந ம் முடைய தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் இருக் கின்ற துர்ப்பாக்கியமான சூழ்நிலை - கோரிக்கைகள் நிறைவேற் றப்பட்ட பிறகும், நம் பெருமைக்குரிய இதுபோன்ற மன்றத்தில் அறிவித்து விட்ட பிறகும், அதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்படும் என்று இந்த மாமன்றத்தில் உள்ள மிகத் தகுதி வாய்ந்த பெரியவர்களை எதிரில் வைத்துக்கொண்டு உறுதியாகச் சொன்ன பிறகும், எங்கள் ஆறு கோரிக்கைகள் தீர்க்கப்படவில்லை, தீர்க்கப்படவில்லை என்று ஆசிரியர் களுடைய சங்கத்தினர் செய்திகளை வெளியிடுவதும், அவை களைப் பற்றி நாட்டிலே இருக்கின்ற நல்லவர்கள் எந்த வித மான கருத்தையும் அறிவிக்காமல், ஒரு வேளை இந்தக் கிளர்ச்சி நடந்தால் இது ஒரு வகையில் அரசியல் இலாபமாக இருக்கட்டும் என்கின்ற எண்ணத்தில் மௌனமாக இருப்ப தும், நம் எதிர்க் கட்சித் தலைவரவர்கள் சொன்ன நாட்டின் எதிர்கால நன்மைக்கு உகந்ததல்ல என்பதை நான் மிகுந்த பணிவன்போடு தெரிவித்துக்கொள்வேன். மா சில நல்ல காரியங்கள் நிறை வேற்றப்பட்ட பிறகும், கிளர்ச்சி நடத்துகிறார்கள் என்றால் அந்த ஆசிரியர் களைத் தூண்டிவிடுகின்றவர்கள் அல்லது ஆசிரியர்கள் சங்கத்திலே எப்படி யோ வந்து புகுந்துவிட்டவர்கள், அதன் மூலமாக விளம்பரம் தேட விரும்புகிறார்கள் அல்லது மேற்படி ஆசிரியர்களை அவர்கள் கவர்ந்து கொள்ள, இழுத்துக்கொள்ள நினைக்கிறார்கள். பால்