உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரும்பு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

2 திருமண அழைப்பு இதழ்களைக் கண்டே, 'திக்பிரமை' கொண்ட வன் போல் உட்கார்ந்திக்கும் அவனுக்குத்-திருமணத்தையும் நேரில் பார்த்துவிட்டால் எப்படியிருக்கும் ? அவனுக்கு நடை பெற்ற திருமணம் - அப்போது முழங்கிய மேள ஒலி ! மணமேடை யில் இருந்தவாறே மனைவியிடம் காட்டிய குறும்பு ! அவள் அதை ரசித்து மகிழ்ந்த மென்மை ! தொடர்ந்து துவங்கிய இன்பபுரிப் பயணம் ! பின்னர் வந்த அன்புச் சின்னம் ! தேனுக்கும் கற்கண்டுக்கு மிடையே அவன் ! திடீரென வாழ்விலே வீசிவிட்ட புயல் ! நீங்காத நித்திரைக்கு ஆளாகிவிட்ட அவன் துணைவி ! அம்மாவையிழந்த அருமை மகன் !-இந்த நிகழ்ச்சிகளும், காட்சி களும் அவன் மனக்கண் முன்னே படையெடுத்து வரும். அதற் காகவே திருமணங்களுக்குப் போகிற வேலையை நிறுத்திக்கொண் டான். இப்போதோ தட்டமுடியாத அழைப்பு வந்துவிட்டது. ரத்தினமும் அவனும் இணைபிரியாத நண்பர்கள். அவன் மணத் திற்குப் போகவில்லையென்றால்.... கோகுலுக்கு அதை நினைக்கவும் இயலவில்லை. இரண்டொரு நாட்கள் குழப்பத்திற்குப் பிறகு, ரத்தினத்தின் கல்யாணத்திற்குப் போவது என்று முடிவு செய் தான். ரத்தினத்தின் திருமணம் புதுமை முறையிலே நடைபெற்றது. அந்த வட்டாரத்திலேயே மிகப் புதிய கல்யாணம் என்று அவன் கோகுலுக்கு எழுதியிருந்தது உண்மைதான் ! ஊர்மக்கள் எல்லா ரும் - அழைப்பில்லா தவர்கள்கூட-அந்த அதிசயக் கல்யாணத்தைப் பார்க்கக் கூடியிருந்தார்கள். - புரோகிதர் - ஓம குண்டம் -அம்மி அரசாணி எதற்கும் வேலையில்லாமல், வந்திருப்போரின் அன்பைச் சாட்சியாக வைத்து, அறிவு முறையிலே திருமணம் நடைபெற்றது. கோகுல், மாப்பிள்ளைக் கோலத்திலே தன் நண்பனைக் கண்டான். அடக்கி வைத்திருந்த துக்கம் அணையுடைத்துக் கிளம்ப முயன்றது. சமாளித்துக்கொண்டான். நண்பனது வாழ்க்கை ஒப்பந்த விழா ! அதிலே தான் இப்படி நடந்துகொள்வது சரியல்ல என்று அவனுக்குத் தெரியாமல் இல்லை ! தலைவரின் முன்னுரைக்குப் பிறகு. அனைவரின் வாழ்த்துரைகளோடு, மணமகனும் மணமகளும் மாலை கோகுலின் திருமணம் இப்படி நடக்க சூட்டிக்கொண்டார்கள். வில்லை. அக்கினி, அருந்ததி சாட்சியாக நடைபெற்றது. அந்தத். தெய்வீகத் திருமணத்தையும் - தன் மனைவியின் உயிரைப் பிடித்துக் கொள்ளத் திராணியற்ற அந்தத் தெய்வங்களையும் நினைத்துக் கொண்டான். அவனாகவே சிரித்துக்கொண்டான். திருமணம் முடிந்து, விருந்து முதலிய நிகழ்ச்சிகளும் நல்ல முறையில் நடந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/8&oldid=1699629" இலிருந்து மீள்விக்கப்பட்டது