உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரும்பு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

3 தேறின. கோகுல், நண்பனிடம் விடை பெற்றுக்கொண்டு சென்னைக்குத் திரும்ப ஆயத்தமானான். விடையளித்து வழி அனுப் பும்போது, ரத்தினம் அவனைப் பார்த்து, கோகுல் ! எத்தனை நாளைக்கு இப்படியே இருந்துவிட எண்ணுகிறாய்? சென்றதை மறந்துவிட்டு, இன்னொரு திருமணத்தை ஏற்பாடு செய் ! நீ என்ன, இப்போது கிழவனாகவா ஆகிவிட்டாய்? என்று உபதேசம் செய்ய ஆரம்பித்தான் ! 'கிழவனாகவும் ஆகிவிடவில்லை. கல்யாணமே இனி வேண்டா மெனும் ஞானியாகவும் மாறிவிடவில்லை. ஆனால், .. குழந்தை குமார் இருக்கிறான். ... வரப்போகும் புதிய தாயார், அவனுக்கு ஒரு 'கிரகணமாகிவிட்டால் என்னப்பா செய்வது ?” என்றபடி கண்ணீர் வடித்தான் கோகுல். நீண்ட நேரம் உரையாடலுக்குப் பிறகு எந்த முடிவுமில்லாமலே இருவரும் பிரிந்தனர் ! திருக்குவளைக்கு அருகே ஆறு மைலுக்கு அப்பால் அம்மனூர் சென்றால் புகைவண்டியில் செல்ல வசதியாயிருக்கும் என்று கூறி. கோகுலை இரட்டை மாட்டுவண்டியில் ஏற்றிவிட்டிருந்தான் ரத்தி னம். ரயில் வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகலே ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தான் கோகுல். வந்த வண்டிக் காரனும் திரும்பிப் போய்விட்டான். அந்தச் சிறிய ரயிலடியில் பேச்சுத் துணைக்குக்கூட அவனுக்கு ஆள் கிடைக்கவில்லை. அங்கும் இங்கும் உலவிக்கொண்டேயிருந்தான். தனிமையின் தோழனாகச் சிகரெட்டையாவது தேடுவோமென்று பக்கத்திலே விசாரித்தான். "அதோ !” என்று கை காட்டிவிட்டுப் போனார்கள் ஊர்க்: காரர்கள். இருட்டிலே ‘மினுக் மினுக்' என்று வெளிச்சம் காட்டிக்கொண் டிருக்கும் அந்தச் சிறிய கடையை நோக்கி அவன் போனான். கடை இருந்தது; ஆனால், வியாபாரம் செய்யும் ஆள் யாரையுங் காணோம். ஆகவே, ஒரு சிறிய வீட்டுத் திண்ணையிலே அந்தக் கடை இருந்த காரணத்தால், கடைக்காரர் உள்ளேயிருப்பார் என்று நினைத்து "யார் கடையிலே ?" என்று கூப்பிட்டுப் பார்த்தான். "யாரது... என்ன வேணும் ?” என்று கேட்டபடி ஓர் அழ கான யுவதி வெளியே வந்தாள். மங்கலான வெளிச்சத்திலும் அவள் முகத்தை அவனால் பார்க்க முடிந்தது. அப்படிப் பார்ப்பது முறையல்ல என்ற திடீர் உபதேசம் அவன் உள்ளத்திலே கிளம்பவே, சிகரெட் வேணும்!” என்று தயங்கிய குரலில் கேட்டான். அவள் சிகரெட்டைத் தேட ஆரம்பித்தாள். தேடுவதற்காக அவள் எடுத்துக்கொண்ட முயற்சியின்போது, அவளது தேகத்திலே ஏற்பட்ட லாவகமான வளைவுகளை அவனால் பார்க்காமல் இருக்க முடியவில்லை. பட்டணத்துப் பெண்கள் நட்டுவனார் வைத்துப் பாடம் கேட்டும் கற்றுக்கொள்ளாத அபிநய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/9&oldid=1699630" இலிருந்து மீள்விக்கப்பட்டது