உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அம்மையப்பன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பலதேவர்: என்னால் இயன்றதைச் செய்யக்காத்துக் கிடக்கிறேன். வேலழகன்: நீர் செய்வீர், ஆனால் உமது ஊர் மக் களுக்கு வேங்கை புரத்து படையிலே சேர்வதென்றால் வெறுப்பாய்த் தானிருக்கும். ஏனெனில் அவர்களை அடிமை யாக்கி வைத்திருக்கும் அரசனன்றோ அவர்? முதல் பலதேவர் : அதெல்லாம் ஒன்றுமில்லை. அடிமையாகிய நானே அவரை முழந்தாளிட்டு வணங்கு கிறேன். முழுமனதோடு அவர் வேண்டுமென்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். தாங்கள் எதிர்பார்ப்பது போல் படையில் பலர் சேர்வர். சந்தேகமே இல்லை. ம வேலழகன் : சரி ! நான் தங்குமிடத்துக்குச் செல்ல

வேண்டும். பலதேவர்: தங்களுக்காக தெற்கு ராஜ வீதியிலுள்ள தென்றல் மாளிகை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வேலழகன் : சந்தோஷம் பலதேவர் மாளிகை திரிசங்கு: தம்பி! தம்பி! நீங்கள் என் வீட்டுக்கு வந்ததும் போதும்... அப்பப்பா! அதிலேயிருந்து முத்தா யிக்கு உங்கள் பேச்சேதான். சுகதேவ்: என்ன-எது--இருஇரு-அப்படியா இந்தா திரிசங்கு! இந்தா-இந்தா! இதிலே நூறு பொன் இருக்கு... வச்சுக்க...ம்... என்னா சொல்லுது - என்னா சொல்லுது- திருசங்கு: முத்தாயி சொல்லுது தம்பி, உங்க நடை யிலே ஒரு வீரம் இருக்கிறதாம்-கண் பார்வையிலே ஒரு கம்பீரம் இருக்கிறதாம் - பேச்சிலே இனிமை இருக்கிறதாம். கையிலே என்னமோ இருக்குதுன்னு சொல்லுச்சே. சுகதேவ்: விரல்--விரல்! திரிசங்கு: இல்லை தம்பி... சுகதேவ்: விரல்லே மோதிரம் இருக்கு...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/22&oldid=1700434" இலிருந்து மீள்விக்கப்பட்டது