உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன முழக்கம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்க லோகத்தில் ( சொர்க்க லோகம், சூரியன் மறையும் நேரம். சுந்தரமான பூஞ்சோலை. சோலையின் ஒரு மூலையில் சொந்த விஷயங்கள் பேசிக் கொண்டிருந்த சில தேவர்கள், சுற்றிச் சுற்றிப் பூப்பறித்து சுழல் வண்டு களென ஆடிவந்த அரம்பையர்கள், அவர்கள் ஒரு வருக்கொருவர் பேசிக் கொள்ளும் ஒய்யாரம்; ரம்பையின் நவரத்ன மாலையைப் பார்த்து மேனகை, இது ஏதடி? என்று கேட்க இது இந்திரன் தந்தது என........ ஓஹோ கட்டிலறைப் பரிசா என்று மற்றவர்கள் கேலி செய்ய...... அப்படியே ஒவ்வொருவரும் தங்கள் அணிகளை...... இது சந் திரன் சன்மானம், இது சூரியன் பரிசு, இது மன் மதனின் வெகுமானம் என அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தனர், சந்திரனும் தாரையும் அஸ்வதி நட்சத்திரத்தை எடுத்து பூப்பந்து ஆடிக் கொண் டிருந்தார்கள், ஒரு பகுதியில்! பூலோகத்தையே உருட்டி அக்னி பகவான் வாயு முதலியவர்கள் கால்பந்து விளையாட்டில் மும்முரமாக ஈடுபட்டிருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன_முழக்கம்.pdf/14&oldid=1701722" இலிருந்து மீள்விக்கப்பட்டது