உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன முழக்கம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 லே காயங்கண்டு பனிப்பார்வை வீசி, அவன் மலைத் தோளில் முகத்தை ஒட்டிக்கொள்ள - அந்த மகிழ்ச்சியை ஒரு கவிதையாக மாற்ற நினைத்து எல்லைக்குள் அதை அடக்க முடியாமல் தோல்வியால் தொங்கிய முகத்துடன் ஒரு புலவன் திரும்பிவிட... இங்ஙனம் காதலும் வீரமும் கரைபுரண்டோடியது திராவிடத்தில் ஒரு நாள்! ஆனால் பயனற்ற இன்றைய பாட்டிக் கதையல்ல! நம் பாட்டனும் பாட்டியும் வாழ்ந்த வரலாறு! பெற்றிருந்த பண்பு! க ள ஆரியர் உருட்டி விளையாடும் உருட்டுச்சட்டிப் பொம்மைகளாய், ஆங்கில ஏகாதிபத்தியத்தைவிடக் கொடிய வடவர் ஏகாதிபத்தியத்தின் வால் பிடிப்ப வர்களாய்-சீரிளமைத் தமிழ் ஒழித்து, செந்தமிழ் நாடழிக்க இந்தி மொழிக்குப் 'பாராக்கு' கூறும் சிப்பாய்காய்,இங்குள்ள தோழர் இருக்குங் காலத் திலேயே பொங்கல் விழாக் கண்டு நமக்குப் பூரிப்பு தங்கவில்லை யென்றால்,காமராஜர்கள் சண்முகங்கள், ஜீவாக்கள் தோன்றி யிராத அந்தக் காலத்தில்- மானத்துக்கும் தமிழனுக்கும் நீங்காத தொடர்பு இருந்த அந்தக் காலத்தில்-களத்தில் ஈட்டியைச் சுவைத்துக் கிடந்த வீர பரம்பரை வாழ்ந்த அந்தக் காலத்தில்-பொங்கல் இப்படிச் சோற்றுப் பொங்க லாகவா இருந்திருக்கும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன_முழக்கம்.pdf/26&oldid=1701741" இலிருந்து மீள்விக்கப்பட்டது