உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 வனப்பை வர்ணித்து ஆனந்த லாகிரியில் அமிழ்ந்து கிடக்க, கண்ணீரானது கரை புரண்டு கடலில் கலக் கும் விதத்திற்கு உதாரணம் தேட, கலை தேவையில்லை. கீதம். கலை காலத்தின் கண்ணாடியாக...இன எழுச்சியின் முரசமாக இருக்கவேண்டும். கம்பரின் காதை...காமக் கோட்டத்தின் கடவுளீயத்தில் மக்களைக் கவிழ்த்து சதிபுரியும் சிந்து ! வேற்றினத்துக்கு வணங் கிச்சாகும் வேதனையைத்தந்த வெண்பா! நான் முத லில் குறிப்பிட்டபடி கலையை நாற்றக் குட்டையாக்கி நெளிகின்ற புழுக்கூட்டம். சேலம் மாநாட்டிலே கம்பர் கதையை நெருப்பில் போட வில்லையே தவிர சேதுப்பிள்ளை -பாரதியார் தோல்வி, கம்பராமாயணத்துக்கு மூட்டப்பட்ட தீ என் பதை தோழர் அறியவேண்டும். "காமாலைக் கண்ணின்றி, கலைமாலைக் கண் கொண்டு நோக்கவேண்டும்......இப்படியாக உள்ள சில உண்மைகளை உணராதவரை இராவணன் நம் பாட்டன்தான், சூர்ப்பனகை நம் பாட்டிதான். என்று கிண்டல் செய்து கட்டுரையை முடிக்கிறார் கம்ப பக்தர்! 39- தோழர் எழுதுவதற்கு இடங் கொடுத்த குமுதத் தின் கெளரவ ஆசிரியர் அழகப்ப செட்டியார் அவர்கள் எப்பொழுதாவது புது டெல்லிக்குப் போனால் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களைக் கேட்கட்டும் ; ராமா யணத்தில் அரக்கர் என்று குறிக்கப்படுவோர் யா ரென்று! “ராமாயணத்தில் அரக்கர் என்று எழுதப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/28&oldid=1701831" இலிருந்து மீள்விக்கப்பட்டது