உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 "மகன் போன இடமறியேன் அப்புலி வாழ்ந்த குகையிதோ !" என தாயொருத்தி வயிற்றைக் காட்டி னாள் என்ற வீர முழக்கத்தை விருத்தமாக்கினவர்- என் பாலைக்குடித்தவனா பகைவனின் ஈட்டியை முதுகி னால் தாங்கினான்.....அவன் பால் குடித்த மார்பின் ரத்தத்தை இந்த வாள் குடிக்கட்டும் என ஆவேசக் கூச்சல் போட்ட கிழவி யொருத்தியின் எழுச்சியை இதய கீதமாக்கினவர்" தந்தை மாண்டார். சோதரர் செத்தார், என் இளம் மகனே ! இங்கே வா ! இந்தா வேல்! இந்நாடு உன் உதிரத்தாலும் நனையட்டும்" என்று தலைவாரி பூச்சூடி களத்திற்கு பசலைப் பையனை அனுப்பிய தாயின் நாட்டுப் பற்றை சிங்க நடைச் செய்யுளாக ஆக்கியவர்-ஆம் மேலே காணப்படும் பெண் புலிகள் தான் ! அவர்கள் இருந்த திராவிடம்..அவர்களுடைய கல்லறைகளின் மேல் அமர்ந்து அவர்கள் தந்த தமிழ்ச் சொத்துக்களை வீசி யெறிந்துவிட்டு மாரியம்மன் தாலாட்டை மனப்பாடம் செய்கிறது. புறநானூறு இங்கிருந்து புறப்பட்டு இதோ இரஷ்யாவில் புகுந்து விட்டது. சென்ற போராட்டத்தில் இடோகியோ நிஜு லினா என்பவர் ஆகாய விமானம் மூலமாக 600 தடவை பறந்து சென்று விரோதிகளின் விலாவை ஒடித்து... வேகமான தாக்குதல்கள் நடத்தி திரும்பினார், இடோ கியோ நிஜூலினா. ஆணல்ல 1 பெண் ! பெண் !! இங்கு ஏணை! அங்கு ஏரோப்ளேன்! இங்கு அரசமரம்! அங்கு ஆராய்ச்சிக்கூடம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/31&oldid=1701834" இலிருந்து மீள்விக்கப்பட்டது