உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 கல்லூரியில் 150 மாணவர்கள் இருக்கிறார்கள். பிராமண மாணவர்கள் 90 பேர் இருக்கின்றனர். ஹரிஜன மாணவர்கள் 3 பேர்களே உள்ளனர். பிராமண மாணவர்களும், பிராமணரல்லாத மாணவர்களும், பொது உணவு முறை ஏற்படுத் தப்பட்டாலும், தனியாக உண்ண விரும்புபவ ருக்கு உபகாரச் சம்பளம் கொடுப்பது நிறுத்தப் பட்டாலும் கல்லூரியை விட்டு விலகிவிட ஒரே முகமாக விரும்புகின்றனர். அரசாங்கத்தை இது பற்றி மீண்டும் தெளிவாக-தாராள மனப்பான் மையுடன் சிந்திக்கும்படி வேண்டிக்கொண்டும் பொது உணவு முறையை ஏற்க மறுக்கும் மாண வர்களுக்கு உபகாரச் சம்பளத்தை தொடர்ந்து கொடுக்குமாறு தேவஸ்தான கமிட்டியையும் வேண்டிக்கொள்கிறேன்” வகுப்புவாதத்தை திராவிடக் கும்பல் நாட்டில் பரப்புகிறது என்று பிரச்சாரம் செய்கிற பிராமணோத் தம குலத்துப் பெம்மான் ஸ்ரீ துரைசாமி அய்யங்காரின் இந்த அறிக்கை 29-5-48 மெயிலில் காணப்படுகிறது. கல்லூரி மாணவர்கள் நூற்றியைம்பது பேர். நூற்றுக்கு மூவராய் வாழும் பார்ப்பன குலத்தவர் அந்தக் கல்லூரியில் தொண்ணூறு பேர்! நூற்றுக்கு தொண்ணூற்றேழு பேராயுள்ள திராவிட மாணவர்கள் அங்கு ஐம்பத்தேழு பேர். படிப்பில்லா சமுதாயமாக பாழ்பட்டு நிற்கும் பழங்குடி வகுப்பினர் மூன்று பேர். சதவிகிதக் கணக்குப்படி 100-க்கு 60 பார்ப்பனர்; 100-க்கு 38 (பார்ப்பனரல்லாத) திராவிடர்; 100-க்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உணர்ச்சிமாலை.pdf/36&oldid=1701840" இலிருந்து மீள்விக்கப்பட்டது