உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உறவுக்குக் கை கொடுப்போம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 ஒதுக்கப்பட்டு, கப்பி போடப்பட்ட சாலை 535 கி.மீ. தார் போடப்பட்ட சாலை 645 கி.மீ. இதனால் பயனடைந்த ஊர்கள் 463. 1,500 பேர்களுக்கும் குறைவாக உள்ள கிராமங்களுக்குச் செம்மண் பரப்புகின் ற திட்டம், 1974-75-இல் 2,063 வேலைகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அந்த வேலைகள் இப் போது நடைபெற்று வருகின்றன. ஆகவே கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டுவிட்டன என் று கூறுவது சரியல்ல. , இந்த அரசு வந்த பிறகுதான் எல்லாக் கிராமங்களுக்கும் மின் வசதி செய்து தர வேண்டுமென்று திட்டமிட்டு, இது வரையில் தமிழகத்தில் உள்ள குக்கிராமங்கள் உட்பட 61, 204-க்கு நாம் மின் இணைப்புத் தந்திருக்கிறோம். இன்னும் கொடுக்க வேண்டிய கிராமங்களின் எண்ணிக்கை 1,283 தான். இதைத் தவிர 23,897 அரிசனக் காலனிகளுக்கு மின் இணைப்புத் தந்திருக்கிறோம். இன்னும் தர வேண்டியது 902 தான். ப் சிலம்புச் செல்வர் பேசுகிற நேரத்தில், தமிழுக்குத் தனித் துறை என்கிற ஒரு தலைப்பு இருந்தாலும் அதற்காக ஒதுக்கப் பட்டிருக்கிற ஒரு கோடி ரூபாய் இதுவரையிலே செய்யப்பட்டு வரு கி ற சலவுகளின் அடிப்படையில் அமைந்திருக்கிறது; புதிதாக என்ன செய்யப் போகிறோம் என்பதற்குத் தனியாகவே த மிழ் வளர்ச்சிச் சிறப்புத் திட்டத் துறை என்கிற வகையிலே ஒன்றை அமைக்க வேண்டுமென்று சொன்னார்கள். இந்த அரசின் சார்பில் அவர் குறைபட்டுக் கொண்டதைப் போல தமிழைப் பயிற்று மொழியாக ஆக்கும் முயற்சியில் நாம் முழு வெற்றியைக் காண முடியாவிட்டாலும், தமிழ் ஆட்சி மொழி ஆவதற்கு வேண்டிய பல்வேறு முயற்சிகளை நாம் மேற்கொண் டிருக்கிறோம். ஆகவே பல்வேறு துறைகளிலே- குறிப்பாக கல்வி போன்ற துறைகளில் நாம் செலவழிக்கின்ற தமிழுக்காகவும், சேர்ந்துதான் பயன்படுகிறது என்பதை மறந்திடலாகாது. கோடியில் அரிசனங்களுக்காக (5.000€ பணம் 32