உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரே இரத்தம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பயணம் செய்த களைப்பில் நன்கு தூங்கிவிட்ட சோமுவும் வேணியும் காலையில் எட்டு மணிக்கு மேல்தான் எழுந்து ஒன்பது மணி அளவில் தங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டார்கள். வேணி! கொஞ்சம் மன்னித்துக்கொள்ள வேண்டும். சோமுவும் நானும் சிறிது நேரம் தனியாகப் போய்விட்டு வர வேண்டும்" என்றான் மகேஸ்வரன்! 'ஓகோ! வருங்கால வாழ்க்கைத் துணைவி இந்த ஊர்லேதான் பார்த்தாகுதா?... அந்த அதிர்ஷ்டக்காரியை உங்க நண்பர் மட்டுந் தான் பார்க்கலாமா? எனக்கு அனுமதி கிடையாதா?' கேலி! ஒரு குறும்புச் சிரிப்பு! செல்லக் கோபம்! வேணிக்கேயுரிய “வருங்கால வாழ்க்கைத் துணைவியை அநேகமாக நிச்சயம் செய்துவிட்டேன். ஆனால் இந்த ஊரிலே இல்லை. அதற்கு முன்பு ஒரு பெரிய பிரச்சினை. பெரிய பிரச்சினை. அவிழ்க்க முடியாத முடிச்சு. அதுக்காகத்தான் உங்கள் இருவரின் உதவியை நாடியிருக்கேன். சோமுவுக்குத் தெரிஞ்சா உனக்குத் தெரியாமலா போய்விடும். என்னோடு தனியா வர சோமுவுக்கு உத்திரவு கொடு வேணி!” மகேஸ்வரன், மிகப் பணிவாகக் குழைவுடன் கேட்டான். சோமு, மகேஸ்வரனின் முதுகில் அடித்து “ஏய்! என்னை என்ன; வீட்டுக்காரிக்கு அடிமைன்னா நினைச்சுகிட்டே? வேணி உத்திரவு பெற்றுத்தான் நான் வெளியே புறப்படணுமா? இதைவிட எனக்கு அவமானம் வேற இல்லடா!' என்றான்; வேண்டுமென்றே கடுகடுப் பாக முகத்தை வைத்துக்கொண்டு! “பிரபோ! நான்தான் உங்கள் அடிமை! ஆண்களிடம் ஆமைபோல் ஒடுங்கிக் கிடக்கவேண்டிய பெண் குலத்துக்கு ஆண்களுக்கு உத்திரவிட அருகதை ஏது? தங்கள் விருப்பம், என் பாக்கியம்! என் உத்திரவை எதிர்பாராமலே என் பிராண நாயகர் ஸ்ரீமான் சோமு அவர்கள், மிஸ்டர் மகேஸ்வரனுடன் வெளியில் சென்று வருமாறு பிரார்த்திக்கிறேன்.” 82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/82&oldid=1702482" இலிருந்து மீள்விக்கப்பட்டது