உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரே முத்தம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே முத்தம் 9 லுவார். அப்போது இந்நாடு, மக்கள், சீமான், ஏழை, எல்லாம் வாயில் வராது. (புத்தன்போல் நடித்துக்கொண்டு) என் உயி ரோடு உயிராக உறைந்து கிடப்பது குமரி என்ற குயில்! அவள் அழகு, அவள் மஞ்சம்...... குமரி:- ரமேலா! பேசாமலிருக்கமாட்டாய்? (குமரி புத்தனின் படத்தில் மெய்மறந்திருக் கிறாள்] ரமேலா:- ஓ! இளவரசரோடு பேசுகிறாயா? அது படம். குமரி:- இந்தப் படத்திற்கு மட்டும் பேசும் சக்தி இருந் தால்....? ரமேலா- இங்கிருந்து என்னை விரட்டி அடிப்பாய். [குமரி பெருமூச்சோடு நகர்கிறாள்] ரமேலா:- இப்படி வாடுகிறாயே ஒருவார்த்தை அவரிடம் கூறிவிடேன். உன் அத்தான்தானே? குமரி:- மறுத்துவிட்டால்? ரமேலா:- மறுப்பது, மனோரஞ்சித மலரையா? குமரி:- ரமேலா! இளவரசர் எண்ணமெல்லாம்... (என்று ரமேலாவைப் பார்க்கிறாள் ஆசையோடு) காட்சி 3. இடம்:- மாளிகையில் ஒருபுறம். (அமைச்சர்,அரசர் மகாவீரர்) அமைச்சர்:- இளவரசரின் எண்ணமெல்லாம், இன்பபுரி யின் எதிர்காலத்தைப் பற்றியது. நாட்டை இன்பலோகமாகச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/11&oldid=1702587" இலிருந்து மீள்விக்கப்பட்டது