உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரே முத்தம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே முத்தம் 59 புத்த:- ஓடுவதா? பொன்னீ! மார்பில் ஈட்டி தாங்கி மடி வேன். புறமுதுகு காட்டமாட்டேன்- (புதரை நோக்கி) உம்.... குத்து, ஏன் பயமுறுத்துகிறாய்? உன் ஈட்டி என் இதயத்தைப் பிளக்கும், அவ்வளவுதானே! உம் விட்டெறி. வீரனாகச் சாகி றேன். (திடுக்கிட்ட பொன்னி, அய்யோ என அலறி ஓடிவந்து புத்தனைப் பிடித்துக்கொள்ளவே, புத்தன் இடி இடியெனச் சிரிக் கிறான்) புத்:- ஒரு பொய், மூன்று பொய்யாக முளைத்துவிட்டது! பொ:- முதல் பொய் எது? புத்:- நான் கனவு கண்டேனே அது! பொ:- உங்கள் வார்த்தைகள் எல்லாமே இப்படித்தானா? புத்: விளையாட்டு வேளையில் மட்டும். பொன்னீ! உண் மையாகவே அவர்கள் என்னை ஈட்டியால் குத்தியிருந்தால்.....? பொ:- அந்த ஈட்டியில் இரத்தம் காய்வதற்குள், அது என் மார்பில் பாய்ந்துவிடும் ! புத்:- நான் சாவதில் உனக்கேன் பொன்னி கவலை? பொ:- என்னை அவர்கள் தூக்கிச் செல்வதில் உங்களுக் கேன் கவலை? புத்:- கண்ணை இமைகள் காப்பது இயற்கை; பொ:- இமையில் பாயும் ஈட்டி, கண்ணில் பாய்வதும் யற்கை. புத்:- பொன்னீ....... [காதல் கீதம்] புத்:- பொன்னீ! நம்மை யாரூம் எப்பொழுதும் பிரிக்க முடியாதல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/61&oldid=1702676" இலிருந்து மீள்விக்கப்பட்டது