உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரே முத்தம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 ஒரே முத்தம் 'புத்த:- போகிறது. ஆண் பெண் சமத்துவத்தை இப்படி யாவது நிலைநாட்டுகிறீரே! சரியான ஆட்சி! நீதி முறை தெரிந்த சமதர்ம ஆட்சி. . விபீஷ :- நாட்டில் கொலை. களவு, பொய், சூழ்ச்சி எந்தப் பிசாசும் தலையெடுப்பதில்லை ஒரே அமைதி நிலவுகிறது. புத்த:- சரிதான். விபீஷ:- இன்றுகூட ஒரு விபசாரியைப் பாதாளச் சிறை யில் போட்டிருக்கிறேன் புத்த:- விபசாரியா? விபீஷ:- ஆம், வேசி. உயர்ந்த குடும்பத்து ஊதாரிப் பையன்களோடு, விபசாரம் நடத்தியவள். புத்த:- விபசாரம்! விஷத்தைவிடக் கொடியது ஆமாம், அவள் விபசாரி என்பது நன்றாகத் தெரியுமா? விபீஷ:- சந்தேகம் வேறா? புத்த- ஆலோசித்து எதையும் செய்வதுதான் ஆட்சி முறை! அவள் விபசாரி என்பதற்கு என்ன ஆதாரம்? விபீஷ:- அவள் முகமே சொல்லுகிறதே! (வீபீஷணன் சிப்பாய்களுக்கு ஜாடை காட்டவே. அவர்கள் புத்தனுக்கும் பின் மறைந்து நெருங்குதல்) புத்த:- முகக் குறிப்பில் குற்றவாளியைக் கண்டு பிடிக் கிறீர். ரேகை சாஸ்திரம் படித்திருக்கிறீரோ? விபீஷ:- ஆமாம். முகத்தில் காணப்படும் சுருக்கங்கள், அவள் வரழ்வின் அமைப்பைக் காட்டும் ரேகைகள். உதாரண மாக, முகத்தைப் பார்த்ததுமே இது கிழம், இது வாலிபம், என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/88&oldid=1702710" இலிருந்து மீள்விக்கப்பட்டது