உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரே முத்தம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே முத்தம் மகா:- என் காலத்திற்குப் பிறகு நாடு? 115 புத்:- நாசமாகி விடாது. கவலைப்படாதீர்கள். நல்லதொரு மக்களாட்சி மலரும். அந்த மலர்ச்சி கருகிவிடாமலிருக்க ...... நான் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துகிறேன். மகா:- மைந்தா! உன் தியாக புத்தி இந்த உலகிற்கே ஒரு உதாரணம். (காவலாளி வந்து) காவ:- மன்னர் மன்ன! குமரிதேவிக்கு ரொம்ப ஆபத்தா யிருக்கிறது, கூப்பிடறாங்க. புத்:- ஆ!... (பரபரப்போடு புறப்படுகிறார்கள்) காட்சி 30. 20 இடம்:- குமரியின் படுக்கை. (மகாவீரர், வைத்தியர் நிற்கின்றனர். குமரி மார் பில் பெரிய கட்டோடு திணறிக்கொண்டு படுத்திருக்கிறாள். பக்கத்தில் தோழி ரமேலா வும், பொன்னியும் இருக்கிறார்கள், புத்தன் வருகிறான். ஆதரவோடு அவளை எடுத்து மடியில் கிடத்தி) புத்:- குமரீ! குமரீ! (கண் விழித்து) குமரி:- அத்தான்! உங்கள் நெஞ்சில் எனக்கு இடமில்லா விட்டாலும், மடியிலாவது கிடைத்ததே! புத்:- இந்நாட்டுத் தமிழர் இதயமெல்லாம் இடம் பெற்று விட்டாய். குமரி! நீ சாகாதவள். என்னை மன்னித்துவிடு. உன் காதலைக் கொலைசெய்த குற்றம் என்னை விடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/117&oldid=1702753" இலிருந்து மீள்விக்கப்பட்டது