உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கயிற்றில் தொங்கிய கணபதி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 ...... வயது மலர் நீண்ட வைத் தொடுவதில்லை. தொட்டாலும் அதை உரைக்க மறுக்கின்றனர். மடியப்போகிறோமே என்று மணம் தராமல் இருக்கிறதா? அப்படியிருக்கும் மலரைத்தான் மக்கள் விரும்புவரா ? வாடா மல்லிகையை வரவேற்பவர் யார்? சாகப்போகி றோமே என்பதற்காக, சமுதாயத்துக்குச் செய்ய வேண்டிய பணியைச் செய்யாமலிருப்பதா? மலர் மணம் தர மறுப்பதா ?...... மணம் தரும் மலராகத்தா னிருந்தார் கணபதி. 'முடிசார்ந்த மன்னரெலாம் வெந்து பிடி சாம்பலாயினர்' என்று பாடி, முனிவர் ஆஸ்ரமம் அமைத்துக்கொள்ளவில்லை தூக்குமேடையிலே இந்த முகாரியைப் பாடவுமில்லை, அந்த வீரர்! "நான் மணம் தரும் மலர் கசக்கி எறியப்படுகிறேன் ...... 39 என்ற இதய ஒலியை அவர் கடிதமாக்கினார். அவர் கடிதம் 'அந்த லோக' ஆசைக்காரருக்கு ஒரு சவுக்கு !... 66 மிகவும் உயர்ந்த நிலையில் இருந்து தாழ்ந்து போன ஒரு குடும்பத்தை உருவாக்காது உழைக்கி றானாம், என்று பலர் என்னைப் பார்த்துப் பேசிய துண்டு. அதுபற்றி நான் கவலைப்படவில்லை." ஊருக்குழைத்த உத்தமர், தோழர் சற்குணத்திற்கு எழுதிய கடைசி கடிதத்தில் இதையும் குறிப்பிடுகிறார். எத்தனையோபேர் பணபலத்தினால் குடும்பத்துக் பலத்தினால்.....குடும்பத்துக் குள்ள செல்வாக்கினால், நாட்டுக்குத் தலைவன் நான் என வருவர். நாட்டிலிருந்து வீட்டுக்கு மூட்டை கட்டு அண்ணன், தம்பி, மாமன், மைத்துனன், வீடு, வாசல், இவைகளே அவர்கள் கனவாயிருக்கும். உறவி னருக்கு வேலை தேடிக்கொடுத்தல் - தனக்காக உழைத்த வர்கள், தன்னை தலைவனாக்கியவர்கள், சிறு உரிமை கொண்டாடினாலும் எட்டி உதைத்தல் - இது சில உயர் வர்.