உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கருத்தோவியம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 அது நல்ல யோசனை என்று பல மாநில முதலமைச்சர் களால் பாராட்டப்பட்டது. டெல்லியில் உள்ள பத்திரிகை கள் எல்லாம் எழுதின. தமிழ்நாட்டில் உள்ள பத்திரிகை களும் ம் அதைப்பற்றி எழுதின. மேலவையிலும் சட்டப் பேரவையிலும் அதை வரவேற்றுப் பலர் பேசியதாக எனக்கு நினைவு. ஆனால் இதுவரையில் அதைப்பற்றிய சிந்தனையே மத்திய அரசிலே ய உள்ளவர்களிடம் எழுந்ததாக எழுந்ததாக எனக்குத் தெரியவில்லை. உற்பத்தி பெருகினால் பெருகினால் விலைவாசி குறையும் என்கிற ஒரு கருத்து உண்மையான கருத்துத்தான். என்றாலும்கூட அது மாத்திரம் போதாது என்பதற்கு ஒரு முன் உதாரணமும் நமக்கிருக்கிறது. ஆனால் 1965-66ல் இந்தியாவின் பிரதமராகத் திருமதி இந்திரா காந்தி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட நேரத்தில் 72.3 மில்லியன் டன்னிலிருந்து 107.81 மில்லியன் டன்னாக உணவு தானியங்களின் உற்பத்தி இந்தியாவில் உயர்ந்தது. அப்படி உற்பத்தி அதிகரித்தும், விலைவாசி குறைந்ததா என்றால், இல்லை. உணவு தானியங்களின் விலை. குறிப்பாக கோதுமையின் விலை, மேலும் ம் அதிகமாயிற்று ; அவ்வளவு உற்பத்திக்குப் பிறகும்! பிறகும்! அதற்குக் காரணமென்ன? அதிக உற்பத்தி செய்தால் மாத்திரம் போதாது. சரியான பொருளாதாரக் கொள்கை (Monetary Policy) வகுக்கப்பட் டாக வேண்டும் என்பதைத்தான் அது கோடிட்டுக் காட்டு கிறது என்பதை நான் இந்த அவைக்குத் தெளிவாக்கிட விரும்புகின்றேன். (Supply and demand) வழங்கலும் தேவையும் என்று எடுத்துக் கொண்டால், விலைவாசியை நிர்ணயிக்கின்ற கர்த் தாக்கள் இரண்டும் சமநிலையில் இருக்கின்றன என்று நாம் வைத்துக் கொண்டு பார்த்தால் கூட, கூட, நோட்டு அடித்துக் குவித்துக் கொண்டிருப்போமானால், (Deficit Financing) பற்றாக்குறைநிதிநிலை ஏற்படுகிறது. அப்படிப் பற்றாக்குறை நிதிநிலை ஏற்பட்டால் விளைவு என்ன ? ? மிக அதிகமான பணப்புழக்கம் மிகக் குறைவான பண்டா களைத் துரத்திக் கொண்டு போகிறது. அப்படித் அப்படித் துரத்தும் போது தானாகவே விலை உய யருகிறது. இதை நாம் நெஞ்சில் யதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கருத்தோவியம்.pdf/28&oldid=1702919" இலிருந்து மீள்விக்கப்பட்டது