உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களத்தில் கருணாநிதி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏச்சுப் பேச்சுகளைச் 79 சகித்து வந்திருக்கிறோம், சமாளித்து முன்னேறிக்கொண்டே வருகிறோம். புத்தர் தோற்றார்; இராமலிங்கர் தோற்றார்; தாயுமானார் தோற்றார், பட்டினத்தாரால் முடிய வில்லை, இராமலிங்கனாரும் ஜோதியில் கலந்ததோடு சரி, எவராலும் மதத்துறையிலே, மாறுதல், அடிப் படை மாறுதல்களை, உருவாக்க முடியவில்லை ; நீங் கள் எம்மாத்திரம் ? என்று கொக்கரித்தது ஆரியம்? அலறினோமா? அல்லது அயர்ந்துதான் விட்டோமா? ஆலவாயப்பனை, ஆலகால விஷமுண்ட வாயனை யும் விடவில்லையே நாங்கள், தசாவதாரனையும், தச ரத ராமனையும் தட்டிக்கேட்கத் தவரவில்லையே நாங்கள், இதுமட்டுமா? வேதம், புராணம், இதிகா சம்,பக்திரசப்பாட்டு, தோத்திரம், அந்தாதி, அருள் வாக்கு, எதுவும் எங்கள் பார்வைக்குப் பங்கம் விளைத்திட வில்லையே! பழக்கம், வழக்கம், சாது, சமயம், சன்மார்க்கம், வழிவழிவந்தமுறை, வரப்பிர சாதம் பெற்றதன்மை, மடம்,ஆலயம், ஆண்டவன், அவர் பெற்றுள்ள வரலாற்று மகிமை, எங்களை வீழ்த்திடக் காணோமே ! எதுவும் நாத்தழும்பேறி நாத்திகம் பேசினாலும், நாக்கறு ! பட்டதாகக் கேள்விப்பட்டதுண்டா? புராணத்தைப் புளுகு என்று என்று எழுதினாலும், எங்கள் கரம் 46 புழுத் திடக்காணோமே, இன்னும் ! சிவனாரின் நெற்றிக் களை எங்களைச் சுட்டெரிக்கவில்லை; திருமாலின் திருச்சக்கரம் எங்கள் திக்குநோக்கி வரக்காணோம். தாய், தந்தை - அண்ணன்-தம்பி, உற்றார்- உறவினர் - ஊரார் அத்தனைபேருக்கும் கசப்பான, மனமாற்றத்தைத்தான் நாம் உண்டாக்குகிறோம்.