உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறளோவியம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 குறளோவியம் காதலனிடம், நோயின் கடுமை பற்றி விவரிக்கவும் வெட்கமாயிருக்கிறது. இப்படித் திண்டாடுகிறாள். அந்த வண்டாடும் மலர்க் குழலாள். 46 கரத்தலும் ஆற்றேன் இந்நோயை நோய்செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும். உடலிற் பூசிய சந்தனத்தின் ஈரம் காய்வதற்குள் அவசரப்பட்டார்; பாடச்சொன்னார்; உடனே இதழ் மூடச்சொன்னார்; இசை கசக்கிறதோ?" என்றேன் 'இல்லை; இதழ் இனிக்கிறது" என்றார். விளக்கைக் காட்டி, அணையுங்கள் " என்றேன். அணைத்தார். உயிர், அணு ஒவ்வொன்றையும் தேனில் நனைத்தார். பக்கத்தே சிறிது நகர்ந்தேன். உடனே என் உடலெங்கும் பசலை நிறம் பரவிவிட்டது. அந்தப் பிரிவைக்கூட என் னால் தாங்க முடியவில்லையே ; இந்தப் பிரிவை எப்படியடி தாங்குவேன்? என்று வருந்துகிறாள், அந்த வண்ண மணிச் சிலையாள். 46 . "புல்லிக்கிடந்தேன்; புடைபெயர்ந்தேன்; அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு. 27 முக்கனியோ, முழுமதி மூன்றோ ஐயுறும் வகையில் அமைந்த அந்தப் பெண்ணரசிகள், கண் ணயரா நிலையில் காதலனுக்காகக் காத்திருக்கும் காட்சி யைத்தான் வள்ளுவர், குறளோவியமாகத் தீட்டித் தந் திருக்கிறார், குறையாத அழகோடு - குன்றாத ஒளியோடு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறளோவியம்.pdf/12&oldid=1703063" இலிருந்து மீள்விக்கப்பட்டது