உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. மு. கருணாநிதி சிலைபோல நின்றுவிட்டான் கண்ணன் எழுந்தான். சிங்காரத் தைப் பலங்கொண்ட மட்டும் தாக்கினான். சிங்காரம் எதிர்த்து, ஒரு அடி கூடத் திருப்பித் தரவில்லை. எல்லா அடிகளையும் மௌனமாக வாங்கிக்கொண்டான். கற்பூரம் குறுக்கே வந்து, "அண்ணா! அண்ணா!!" என்று கத்தினாள் அவளையும் இழுத்துத் தள்ளிவிட்டுக் கண்ணன் சிங்காரத்தை மேலும தாக்கினான். சிங்காரம் அசையாமலே நின்றான். 18 கண்ணனுக்கே கைவலிஎடுத்து களைப்பு மேலிட்ட பிறகே அவன் சிங்காரத்தை அடிப்பதை நிறுத்தினான் டிருந்தது சிங்காரத்தின் உதடுகளிலேயிருந்து ரத்தம்கசிந்து கொண் டிருந்தது. காதோரத்தில் ரத்தம் பெருகிவழிந்து கொண் கன்னமும் நெற்றியும் மளமளவென உப்பி வீங்கி விட்டன. அசையாமல் நின்றுகொண்டிருந்த அவன் ஒரு சூடான பெருமூச்சால் பூமியில் தூசியைக் கிளப்பிவிட்டு சிறிது நகர்ந் தான். கால்களை ஒரு அடிகூட எடுத்துவைக்கமுடியவில்லை. ஆனால் அந்த சிரமத்தை அவன் அவ்வளவு பேருக்கும் நேராகக் காட்டிக்கொள்ள விருமபபில்லை. இதுபோன்ற நெருக்கடி அவனுக்கு எத்தனையோ முறை அவன் தொழிலில் ஏற்பட்டிருக் கிறது தீச்சட்டி தூக்கி உற்சாகத்தோடு ஆடிக்கொண்டிருக்கும் போது கை கொப்பளித்துவிடும். அனல் பறக்கும். உடல்தகிக் கும். அப்போதொல்லாம் உறுதியோடு சமாளித்துப் பழக்கப் பட்டிருக்கிறான். அதனால் பல்லைக் கடித்துக்கொண்டு அதை விட்டு நடக்கத் தொடங்கினான். கூட்டத்தில் ஒரே அமைதி குடி கொண்டிருந்தது. கற்பூரம்மட்டும் விம்மி விம்மி அழுதுகொண் டிருந்தாள். எல்லோருமே அவளுக்கு ஆவேசம் வந்துவிடும் என்று எதிர்பார்த்தார்கள். நல்ல வேலையாக அப்படியொன்றும் ஆகவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/136&oldid=1703124" இலிருந்து மீள்விக்கப்பட்டது