உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை 151 வாங்கிக்கொள்ளலாமே - என்பதே அவன்வாத. அதன் பிறகும் கவலைப்பட்ட தாயாரிடமும் அக்காளிட மும் அவன் சொன்ன சமாதானம்; எப்படியும் அந்த மகஜா தபாலில் அனுப்பப் படாமல் இங்கேயே தன்னால் கிழித்தெறியப்படும் என்பதாகும். ன மகஜர் போய்ச்சேராதவழிக்கு சுருளிமலை தந்திரம் கையாளு கிறான் எனக்கண்ட பொன்மணிககுத் தாங்க முடியாத பூரிப்பு? பஞ்சாயத்தாரையும் மற்றவர்களையும் ஏமாற்றி மகஜரை அவன் கைக்கு வரும்படிச் செய்துகொண்டானே தம்பி என்று அவனை வாழ்த்தினாள் பொன்மணி. அந்த வாழத்துதலைப்பெறறு பஞ்சாயத்தார் வீட்டுக்குப் போகிற வழியிலேதான் அறவாழியைச் சந்தித்தான். இதுவரையில் அவன் எண்ணியபடி எல்லாமே நடந்துவிட்டது. இறுதியாக மகஜரை நாசப்படுத்தி விட்டு, தபாலில் சேர்த்துவிட்டதாகப் பொய்யும் சொல்லலா மென்ற துணிவும் அவனுக்கு ஏற்பட்டுவிட்டது து. அவன் ஆனால் பாபம்; அவனும் அவன் வாகனமும் பஞ்சாயத்தார் வீட்டைவிட்டு கொஞ்சதூரம் நகருவதறகுள், அவசர அவசரமாகக் கரகமாடிக் கண்ணன் அங்கே வந்து சோந்தான். அவேன், சுருளிமலையிடமுள்ள அந்த மகஜரைக் கொடுக்கும் படியும், தானே கொண்டுபோய் அஞ்சலில சேர்த்துவிடுவ தாகவும் கூறினான். பஞ்சாயத்தாரும் அதை ஒத்துக்கொண்டார். சுருளிமலை எதுவும் பேச முடியவில்லை. தானே எடுத்துச்சென்று அதைக் குபபையில் போட்டுவிட எண்ணியிருந்தான் ஆனால் நிலைமை மாறிவிட்டது. மகஜர் கரகமாடிக கண்ணன் கையிலே சிக்கி விட்டது அன்றைக்கே அது தபாலிலும் அனுப்பப்பட்டது. இந்தச் செய்தியை பொன்மணியிடம் சுருளிமலை கூறியதும் அவளுக்கு நெருப்பிலே விழுந்ததுபோல இருந்தது இருந்தது தன் கையெழுத்தையும் அறவாழி பார்த்துவிடடான் என்பதைத் தமபி மூலமே தெரிந்துகொண்டு மிக மிக வருந்தினாள். எப்படியாவது அறவாழியைப்பார்த்து, தான் செய்த தவறு மன்னிப்பு கேடகவேண்டு மென முடிவு செய்தாள். இரண்டு மூன்றுநாட்கள் முயன்றாள் ; முடியவில்லை. இரண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/153&oldid=1703154" இலிருந்து மீள்விக்கப்பட்டது