உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை 193 கிற்று. ஆனால் அவன் விடவில்லை. சற்று பிடிவாதத்துடன் இலைகளை அதன் வாயில் திணித்தான். காளை, மறுக்காமல் அவைகளை விழுங்கிற்று. சுருளிமலை விக்கி விக்கி அழுதவாறு, அதன் கழுத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டான். காளைக்கு ஒன்றும் புரியவில்லை. அசையாமல் நின்று கொண்டிருந்தது. . சுருளிமலை, காளையைப் பார்த்து கண்ணே சிவா !" என்றான் மெதுவாக. பிறகு ஓங்கிக் கூச்சலிட்டான். ஒரு சமயம் சிவாவை அவன் பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறான். அது முதல் தான் சிவா அவனுக்கு நண்பனாயிற்று ! ஒரு வயலில் இறங்கி விளைச்சலைக் கெடுத்துவிட்டு சரியான படி சேற்றில் சிக்கிக்கொண்டு தவித்த சிவாவை ஏழெட்டு முரடர் கள் கூடி அடி அடியென்று அடித்துத் தள்ளினார்கள். அப்போது சுருளிமலைதான் ஓடிப்போய் அவர்களை யெல்லாம் விலக்கி காளையை மீட்டுக்கொண்டு வந்தான். அது முதல் சிவாவும் அவனும் இணைபிரியாதவர்களாகி விட்டார்கள்! முரட்டு மனிதர் களிடம் சிக்கிய சிவாவைக் காப்பற்றிய சுருளிமலை இப்போது அதைக் கொல்லவே தீர்மானித்து விட்டான் ! ஏன்? தன் அக்காளுக்காக! அறவாழியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக! அவனால் அழக்கூட முடியவில்லை. சிவாவை ஓட்டிக்கொண்டு திடலுக்கு வந்தான். அறவாழி முன்னே கொண்டுபோய் நிறுத் தினான். பறையொலி தீவிரமாக முழங்கிற்று. . அறவாழி, காளையை எதிர்க்கத் தயாரானான். பொன்மணி, மயக்கமுற்றுக் கீழே விழுந்தாள். காளை அறவாழியின் மீது ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தது. அவன் சமாளித்துக்கொண்டு விலகினான். நெடுநேரம் சண்டை! கூடியிருந்தார் வியக்கும் வண்ணம் அறவாழி காளையிடம் போரிட்டான். நாலைந்து முறை அறவாழியின் வயிற்றைக் கிழித்து ஆளையே நசுக்கிவிடும் என்று அஞ்சக் கூடிய அளவுக்கு அவன்மீது பாய்ந்த காளை குறி தவறித் தரையிலே தலையை மோதிக் கொண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/195&oldid=1703184" இலிருந்து மீள்விக்கப்பட்டது