உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 தெற்கின் விளைவு வடக்கே! க அடுத்து உணவுப் பற்றாக் குறையைப் பற்றியது. கவர்னர் அவர்களுடைய உரையில் உணவு விலை குறையவில்லை என்று குறிப்பிட்டாலும்; உணவு விலை அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பதை மறுக்க இயலாது. எங்கு பார்த்தாலும் உணவு விலை விஷம் போல் தினந் தினம் ஏறிக்கொண்டே யிருக்கிறது. இதற்குக் காரணம் என்ன என்பதைக் கவனிக்க வேண்டும். ஆந்திராவிலுள்ள பெருவாரியான உபரி அரிசி, தமிழகத்திற்குப் பயன்படாமல். வட நாட்டில் கோதுமைப் பஞ்ச மேற்பட்டிருக்கின்ற காரணத்தால் அங்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்குள்ள கோதுமையைக் கொண்டு வடக்கே சரிக்கட்டுவதற் குப் பதிலாக, ஆந்திராவிலுள்ள உபரியான அரிசியை தமிழ் நாட்டிற்குப் பயன்படாத முறையில் எடுத்துச் சென்றதானது, இங்கு விலைவாசி உயர்வுக்குக் காரண மாயிருக்கிறது. இதைப்பற்றி கவர்னர் அவர்களு டைய உரையில் எந்த விதமான குறிப்பும் காணப் படவில்லை. இப்படி விலை வாசிகள் உயர்வதற்கு எப்படிப்பட்ட வழிவகை செய்யப்படும் என்பதும் சொல்லப்படவில்லை. - ஊமை உணவு நிலைமையைச் சமாளிப்பதற்கு சர்க்கார் உணவுப் பெருக்கத்திற்குத் திட்டங்கள்சய்ய வேண்டும். இந்த சர்க்கார் கையில்லாத யின் நிலையில் தான் இருக்கிறார்கள். தங்களுடைய நிலைமை என்ன என்று சொல்ல முடியாமல், ஊமை யாக இருந்து - சுட்டிக் காட்டுவதற்கும் கையற்ற முறையில் இருந்து கொண்டிருந்தால், உணவு நிலை, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/59&oldid=1703246" இலிருந்து மீள்விக்கப்பட்டது