உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 ஒரு ஆண்டு நிறையப்போகிறது. இந்த ஒரு ஆண் டில் நாம் போட்ட திட்டங்கள் எத்தனை - நாம் புரிந்த செயல்கள் எத்தனை - நாம் அடைந்த வெற்றிகள் எத்தனை - நாம் செய்யாமல் விட்டுவிட்ட காரியங்கள் எத்தனை - என்பதை நன்றாகச் சிந்திக்கவேண்டும். - பிரச்சாரக்குழு அமைத்தோம் சட்டதிட்டக்குழு அமைத்தோம். செயற்குழு அமைத்தோம். அமைப் புக்குழு அமைத்தோம். பொதுக்குழு அமைத்தோம். இந்த அமைப்புகள் எப்படியெப்படி வேலை செய்திருக் கின்றன என்பதை வரப்போகும் மா நில மா நாட்டிலே நினைக்கத்தான் போகிறோம். நினைப்பின் விளைவு நிம்மதியாக இருக்காது. ஏனெனில் நாம் செய்யாமல் விட்ட பணிகள் ஏராளம். - - குறை சொல்லப் போகிறேன் என்று யாரும் கருத வேண்டாம். இயக்கம் குழந்தை யென்பதும் அதன் குரல்வளையைப் பிடித்துக் கொல்ல, குள்ள நரிகள் சமயம் பார்த்திருப்பதும் யாரும் அறியாத தல்ல. குழந்தை - ஒராண்டுக் குழந்தை - பேசிப் பாடவேண்டாம், ஆடியோட வேண்டாம், -பாலாவது சாப்பிட்டு உடலைப் பலமாக்கிக் கொள்ளவேண்டாமா? என்பதுதான் கவலை. குழந்தைக்குப் பாலுண்ண கொடுப்பவர்கள் எங்கே ? என்று ஆசைதான் ஒரு குரல் கிளம்பலாம்! அந்தத் தாய் வேலையைச் செய்யவேண்டியவர்கள் இயக்கத்தில் தலைமை மன் றத்தில் இருப்பவர்கள் மட்டுமல்ல - இயக்கத்தின் தொண்டர்களுங் கூடத்தான். இயக்கத்திற்கு ஓர் கட்டடம் தேவை யென்று அறிவித்து அதற்காகப் பத்தாயிர ரூபாய் நிதி தேவை யென்று அறிக்கை புறப்பட்டது. பத்தாயிரம் சேரவில்லை. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/148&oldid=1703697" இலிருந்து மீள்விக்கப்பட்டது