உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 லகாட்சி - 2 10 வஞ்சி படுவன்: பிறந்தநாள்விழா (செங்குட்டுவனின் தனி மாடம். அவனை அழகு படுத்திக் கொண்டிருக்கிறாள் அவன் துணைவி வேண்மாள்.] செங்குட்டுவன்: வேண்மாள்! விழாக்கோலம் பூணச் செய்து என்னைக் கொலு மண்டபத் திற்கு அனுப்புகிறாயே, இதுபோலவே போர்க் கோலம் பூணச் செய்து களத்திற்கு வழி அனுப்ப வேண்டிய காலமும் வருமல்லவா? வேண்மாள்: பிறகென்ன; விழுப்புண் பெறாத வர்கள் வீரர்கள் அல்லவே! களத்திலே ஏற்படும் காயங்களை ஆற்றுவதற்கு என் உதட்டிலே வைத்திருக்கிறேன் மருந்து! செங்கு: கண்ணே! ஆண்டுதோறும் பிறந்த நாள் விழா நமக்கு மாத்திரம் வருகிறது... வேண் : நமக்கொன்று பிறக்கவில்லை என்கி றீர்களா?... இன்று கொலு மண்டபத்திற்கு வரும் நிமித்திகனிடம் ஆரூடம் கேளுங் களேன்; எப்போது நீங்கள் தந்தையாவீர்கள் என்று! [அப்போது மகிழ்ச்சியுடன் இளங்கோ நுழைகிறான்] இளங்கோ: ஆரூடமா? நிமித்திகனிடமா? அவன் பொய்யுரைகளை நீங்களும் நம்புகிறீர் களா அண்ணி? செங்கு:[புன்னகை தவழ] இளங்கோ? இளங் : விழாவுக்கு நேரமாகிறது அண்ணா! புறப்படுங்கள்! செங்கு: நான் முன்பே தயார்! உன் அண்ணி தான் மெருகு கொடுத்துக் கொண்டேயிருக் கிறாள் அலங்காரத்துக்கு! இளங்: அண்ணி! விடை கொடுத்து அனுப் புங்கள் அண்ணனுக்கு! நான் வாயிற்புறம் காத்திருக்கிறேன், அண்ணா! செங்கு: இரு இரு இளங்கோ! நானும் வரு கிறேன்! குறும்புக்காரா!... வேண்மாள்!... ["வருகிறேன்" என்பதை விழியால் உணர்த்திவிட்டுத் தம்பியுடன் செங்குட்டுவன் தனி மாடத்தை விட்டு வெளியேறும் காட்சியை வேண்மாள் பார்த்தவாறு மகிழ்ச்சிப் பெருமூச்சு விடுகிறாள்.)