உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழின இளைஞர்களுக்கு அழைப்பு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணா சூளுரை அந்தப் பெரியார் - எங்களை ஆளாக்கிய பெரியார்- எங்களை உருவாக்கிய பெரியார்-எங்களைச் சுயமரியா தைச் சுடர்களாக வடித்தெடுத்த பெரியார் - அந்தப் பெரியாரிடம் இருந்து பிரிந்து 949-ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் ரீதியாக தமிழ்ச் சமுதாயத்திற்குப் பாடுபடும் என்று கொடி உயர்த்தினார். அப்படிக்கொடி உயர்த்திய போது அறிஞர் அண்ணா சொன்னார்- 1 சமுதாயப் பிரச்சினைகளில் மூட நம்பிக்கையை ஒழிக்கின்ற பிரச்சினைகளில் திராவிடர் கழகமும். திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக இருந்து செயல்படும் என்று அழுத்தந் திருத்தமாக அண்ணா சொன்னார். தாய்க்கழகத்தை ஒழித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்போம் என்று பேரறிஞர் அண்ணா அன்றைக்கு கையை உயர்த்தி முடிவு செய்து புறப்படவில்லை. ஆலுக்கு வேர் பெரியார், அவருடைய கொள்கைகள் - அவருடைய சமுதாயப் புரட்சி எண்ணங்கள் இவைகளைக் காப்பது தன்னுடைய கடமை அதற்காகப் போராடுவது தன்னுடைய தொண்டு என்று அன்றைக்குச் சூள் உரைத்துத்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினாரே தவிர, வாழைக்குக் கன்றாக அல்ல- ஆலுக்கு -வேராக இந்தக் கழகத்தை நான் தொடங்கு கிறேன்-என்று அண்ணா குறிப்பிட்டார். அண்ணா. தந்தை பெரியார் அவர்களுடைய எண்ணங் களைப் பிரதிபலித்தார். என்னுடைய அருமை நண்பர் லத்தீப் இங்கே எடுத்துக் காட்டியதைப்போல் பெரியார் தத்துவமானார். நான் ஏதோ விரிவுரை என்றெல்லாம் சொன்னார்கள்- என்னை வைத்துக்கொண்டு ஏதாவது